பட்டாபிராம் பகுதி அதிரடி வளர்ச்சி.. மெட்ரோ ரயில் வரபோகுதா..?!

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஐடி சேவை மற்றும் டெக் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, அதிலும் குறிப்பாக புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அலுவலக இடங்கள் உடனடியாக புக்கிங் செய்யப்படும் வேளையில் புதிய அலுவலக இடத்திற்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் புதிய முதலீடுகள் தொடர்ந்து பெற வேண்டுமாயின் அதன் உள்கட்டமைப்பு வகதிகள் மிகவும் சிறப்பாகவும் உயர்தரத்திலும் இருக்க வேண்டும். இந்த வகையில் சென்னையில் தற்போது முக்கிய மற்றும் புதிய ஐடி ஹப் ஆக மாறியுள்ள பட்டாபிராம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை மெட்ரோ வாயிலாக இணைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

பட்டாபிராம் பகுதி அதிரடி வளர்ச்சி.. மெட்ரோ ரயில் வரபோகுதா..?!

பட்டாபிராம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன. இதனால், இந்தப் பகுதிக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் சென்னை மெட்ரோ ரயில் கழகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தைச் சென்னை மெட்ரோ ரயில் கழகம் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து, பட்டாபிராம் மற்றும் திருநின்றவூர் பகுதி மக்கள் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரையில் விரிவாக்கம் செய்ய தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

பட்டாபிராம் வரையில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்வது மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோர், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெற முடியும்.

இந்த நிலையில் தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் சடகோபன் கூறுகையில், "ஆவடி வரை மட்டுமல்லாமல், நெமிலிச்சேரி ORR சர்க்கிள் வரையில் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் பட்டாபிராம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பணிபுரிவோருக்குப் பெரிதும் பயன்படும்.

மேலும், வண்டலூர் முதல் மீஞ்சூர் பகுதிகளை இணைக்கும் ORR சாலை வரையில் மெட்ரோ திட்டத்தை நீட்டிக்க வேண்டும். இதனால் பட்டாபிராம் டைடல் பார்க்-ல் அதிக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அலுவலகங்களை அமைக்க வாய்ப்புள்ளது. மேலும், ORR சாலையிலிருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பகுதி விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்வதற்கு எளிதாக இருக்கும்" என பிரபல பத்திரிக்கைக்குத் தெரிவித்தார்.

ஜூலை மாத இறுதியில், பாடி புதுநகர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் வழியாகச் செல்லும் மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தைச் சென்னை மெட்ரோ ரயில் கழகம், ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியது.

சுமார் 16 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த திட்டத்தில் 15 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தொழிற்பகுதிகள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் போன்ற வளர்ச்சி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+