சிக்கன் பிரியாணி, இளநீர் பாயாசம்.. இப்போ இதுதான் டிரெண்ட்.. சென்னை டாப்பு..!

ஒரு சமூகம் வளர வளர அதன் முக்கியத்துவம் மாறிக்கொண்டே இருக்கும் என்றால் மிகையில்லை.

உதாரணமாக ஏழ்மையில் இருப்பவர்களுக்கு நிலையான ஒரு வேலை, வருமானம் இருந்தால் போதும் எனத் தோன்றும், நடுத்தரக் குடும்பத்தில் இருப்பவர்களுக்குச் சொந்த வீடு, அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்குக் கார், பாரின் டிரிப் போன்றவை, பணக்காரர்களுக்குப் பெரிய வீடு, ஆடம்பர வாழ்க்கை, அல்ட்ரா ரிச் மக்களுக்குப் பிரைவேட் ஜெட், வெளிநாட்டில் கெஸ்ட் ஹவுஸ், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற அதிக விலை கொண்ட கார்கள் எனப் பல தரப்பட்ட மக்களுக்குப் பல தேவைகளும், முக்கியத்துவமும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் அனைத்துத் தரப்பு மக்களுக்கு ஒரு விஷயம் மட்டும் அடிப்படைத் தேவையாகவும், விருப்பமாகவும் உள்ளது சுவையான உணவு. இதில் விருப்பம் மாறினாலும் தேவை ஒன்றாக இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஸ்விக்கி நிறுவனம்

ஸ்விக்கி நிறுவனம்

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் நாட்டின் முன்னணி ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு, உணவு பொருட்கள், தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம் இந்த வருடம் மக்கள் தனது தளத்தில் அதிகம் வாங்கிய பொருட்களைப் பட்டியலிட்டது. இந்தப் பட்டியலில் சென்னை மக்கள் அதிகம் வாங்கிய உணவு எது, உணவு பொருட்கள் எது என பட்டியலிடப்பட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டுச் சர்வே

2022 ஆம் ஆண்டுச் சர்வே

ஜனவரி 15, 2022 முதல் நவம்பர் 15, 2022 வரையிலான காலகட்டத்தில் ஸ்விக்கி தளத்தில் சென்னை மக்கள் அதிகமாக வாங்கிய உணவுகள் பட்டியலில் சிக்கன் பிரியாணி, இட்லி, பரோட்டா ஆகியவை டாப் 3 இடத்தைப் பிடித்துள்ளது. இதேவேளையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அதிகம் ஆர்டர் செய்த உணவாகச் சிக்கன் பிரியாணி உள்ளது. 2வது இடத்தில் நெய் பொங்கல் உள்ளது.

பால், வெங்காயம், தயிர்

பால், வெங்காயம், தயிர்

இதைத் தொடர்ந்து உணவு அல்லாத பொருட்கள் பட்டியலில் ஸ்விக்கி தளத்தில் சென்னை மக்கள் அதிகம் வாங்கிய பொருட்கள் பால், வெங்காயம், தயிர் ஆகியவை. மேலும் ஸ்னாக்ஸ் பிரிவில் சமோசா, பாவ் பாஜி, பேல் பூரி ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடு எனப் பார்க்கும் போதும் சமோசா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 இளநீர் பாயாசம்

இளநீர் பாயாசம்

எல்லாம் ஆர்டர் செய்து சாப்பிட்ட பின்பு டெசர்ட் சாப்பிடலைன்னா எப்படி.. நல்லாவா இருக்கும்.. இப்படிச் சென்னை மக்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட டெசர்ட் பட்டியலில் கேசர் ரசமலாய், இளநீர் பாயாசம், குலாப் ஜாமுன் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்

இதுவே மளிகை பொருட்கள், பிற முக்கியமான அடிப்படைத் தேவை பொருட்களை ஆர்டர் செய்யும் தளமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் சென்னை மக்கள் அதிகப்படியாகக் காய்கறி, மளிகை பொருட்கள், பிர்சனல் கேர் பொருட்களை வாங்கியுள்ளனர்.

ஓரே ஆர்டர் 27,378 ரூபாய்

ஓரே ஆர்டர் 27,378 ரூபாய்

2022 ஆம் ஆண்டில் சென்னையில் அதிகப்படியான ஆர்டர் தொகை எவ்வளவு தெரியுமா..27,378 ரூபாய். அதாவது ஒருவர் ஓரே ஒரு ஆர்டரில் சுமார் 27000 ரூபாய்க்கு உணவுகளை வாங்கியுள்ளார். இந்திய அளவில் பார்க்கும் போது பெங்களூரை சேர்ந்த ஒருவர் தீபாவளி பண்டிகையின் போது ஓரே ஆர்டருக்கு சுமார் 75,378 ரூபாய்க்கு உணவுகளை வாங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து புனே-வில் ஒருவர் தனது டீம்-க்கு பர்கர் மற்றும் ப்ரைஸ் வாங்குவதற்காகச் சுமார் 71,229 ரூபாய் செலவு செய்துள்ளார்.

வெங்கடேஷ்

வெங்கடேஷ்

சென்னையில் வெங்கடேஷ் என்பவர் தான் 2022 ஆம் ஆண்டு அதாவது ஜனவரி 15, 2022 முதல் நவம்பர் 15, 2022 வரையிலான காலகட்டத்தில் ஸ்விக்கி தளத்தில் அதிக ஆர்டர்களை டெலிவரி செய்த நபராக உள்ளார்.

5858 உணவகங்கள்

5858 உணவகங்கள்

2022 ஆம் ஆண்டில் சென்னை நகரில் மட்டும் சுமார் 5,858 க்கும் மேற்பட்ட புதிய உணவகங்கள் Swiggy இல் பட்டியலிடப்பட்டுள்ளன. Swiggy உடன் கூட்டு சேர்வதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 50,000 உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்தியுள்ளது.

அடையார் ஆனந்த பவன்

அடையார் ஆனந்த பவன்

ஸ்விக்கி நிறுவனம் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் செயல்படுகிறது. சென்னையைச் சேர்ந்த A2B (அடையார் ஆனந்த பவன்) கூறுகையில் A2Bயில் எங்களின் வர்த்தக முறையை Swiggy மாற்றியுள்ளது.

 லாபம் வர்த்தகம்

லாபம் வர்த்தகம்

Swiggy உடன் இணைந்த பிறகு நாங்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும் லாபத்தையும் கண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளதாக ஸ்விக்கி சென்னை தரவுகளைத் தனியாகப் பிரித்து வெளியிட்ட Edelman தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+