இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் என்கிற
கம்பெனி தான்
இந்தியாவிலேயே வணிக
ரீதியாக கச்சா எண்ணெய்
மற்றும் எரிபொருளை
விற்கும் பெரிய கம்பெனி.
இந்த பெரிய கம்பெனியின்
துணை நிறுவனங்கள் தான்
சென்னை பெட்ரோலியம்
கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL),
இண்டேன் கேஸ் போன்றவைகள்
எல்லாம்.
சமீபத்தில், சென்னை
பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
லிமிடெட் நிறுவனம், மும்பை
பங்குச் சந்தையிடம்
சமர்பித்த அறிக்கையில்,
சுமாராக 1,456 கோடி ரூபாயை Inventory
Write down செய்து இருப்பதாகச்
சொல்லி இருக்கிறார்கள்.

இந்த இன்வெண்டரி ரைட்
டவுன் (Inventory Write down) என்றால்
என்ன..?
ஒரு பொருளை ஒரு
குறிப்பிட்ட விலை
கொடுத்து வாங்கியதாக
வியாபார கணக்கு
வழக்குகளில் எழுதி
வைத்திருப்போம்.
நம் கையில் இருக்கும் போதே,
அந்த பொருளின் சந்தை விலை
(Market Value), நாம் வாங்கிய விலையை
(Book Value) விட
குறைந்துவிட்டால்,
இடைப்பட்ட விலையை நம்
வியாபார கணக்கு வழக்கு
புத்தகத்தில் இருந்து
குறைத்துக் கொள்வோம். அது
தான் மேலே சொன்ன Inventory Write down.
ஏன் இப்படி ரைட் டவுன்
செய்து இருக்கிறார்கள்..?
சர்வதேச அளவில் கச்சா
எண்ணெய் விலை சரிந்தது,
கொரோனா வைரஸ் லாக் டவுன்
காரணத்தால், கச்சா எண்ணெய்
மற்றும் எரிபொருள் தேவை
கணிசமாக குறைந்து
இருக்கிறது போன்ற
காரணங்களால் தான், இந்த
ரைட் டவுன் செய்து
இருக்கிறார்களாம்.
தற்போதைக்கு, இந்த
நிறுவனத்தின் செயல்பாடு,
சுமாராக 60 சதவிகிதம் வரை
குறைத்து
இருக்கிறார்களாம். அடுத்த
சில மாதங்களில் கச்சா
எண்ணெய் மற்றும்
எரிபொருளுக்கான தேவை
அதிகரிக்கும் என
எதிர்பார்ப்பதாகச் சொல்லி
இருக்கிறார்கள்.
ஒரு அரசு நிறுவனத்துக்கே,
கொரோனா காலத்தில் இந்த அடி
விழுந்து இருக்கிறது
என்றால், மற்ற
கம்பெனிகளுக்கு எல்லாம்
எப்படி அடி விழுந்து
இருக்கும் என்று தான்
யோசிக்கத் தோன்றுகிறது.
சரி எப்படியோ கொரோனா வைரஸ்
தொல்லை ஒழிந்து
வியாபாரங்களும்,
தொழில்களும் செழித்தால்
சரி.
இப்படி தொழில்கள்
செழித்தால் தானே,
அடுத்தடுத்து, வேலை
வாய்ப்புகள் அதிகரித்து,
எளிய மக்கள் கையில் பணம்
புழங்கத் தொடங்கினால்
தானே, ஒட்டு மொத்த இந்தியப்
பொருளாதாரம் விரைவில்
வளரும்.


Click it and Unblock the Notifications