சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) தனது மிகப்பெரிய ரெஃபைனரி திட்டத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினத்தில் ஒரு பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க உள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 60 மில்லியன் லிட்டர் (MLD) திறன் கொண்ட டீசாலினேஷன் திட்டம், சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் புதிய ரெஃபைனரியின் செயல்பாடுகளுக்கு உதவும் என்று CPCL இன் மேலாண்மை இயக்குனர் ஹெச் சங்கர் சமீபத்தில் ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

சென்னை பெட்ரோலியம் அதன் தாய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் கூட்டு முயற்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவேரி படுகையில் 9 மில்லியன் டன் (MTPA) உற்பத்தி திறன் கொண்ட மாபெரும் ரெஃபைனரி (கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை) அமைத்து வருகிறது. இந்த ஆலையில் தான் தற்போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க உள்ளது.
இந்த கூட்டணி திட்டம் சுமார் ரூ. 36,354 கோடி முதலீட்டில் நடக்க உள்ள நிலையில் CPCL இதிஸ் 25 சதவீத பங்குகளை பெற உள்ளது. "இது ஒரு கூட்டு முயற்சியாக இருப்பதால், எங்களுக்கு குறிப்பிட்ட அரசு ஒப்புதல்கள் தேவை. தற்போது நாங்கள் இறுதி ஒப்புதல்களுக்காக காத்திருக்கிறோம், அவை முதலீட்டுக்கு மிகவும் முக்கியமானவை" என்று சங்கர் விளக்கினார்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 1991 முதல் அதன் குடிநீரை தனது செயல்பாட்டில் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்கும் உறுதிப்பாட்டை கொண்டுள்ளது. கழிவுநீர் மறுசுழற்சி, மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உப்பு நீர் ஆகியவை பிராசஸ் செய்வது மூலம் நன்னீர் பயன்பாட்டைக் குறைப்பதில் நிறுவனம் நீண்ட காலமாக கவனம் செலுத்தி வருகிறது.
உதாரணமாக சென்னையில் இருக்கும் சுத்திகரிப்பு ஆலைக்கு கட்டுப்பள்ளியில் உள்ள சென்னை பெட்ரோலியம்-ன் ஒரு நாளுக்கு 5.8 மில்லியன் கேலன் (MGD) திறன் கொண்ட டீசாலினேஷன் நிலையம், அதன் ரெஃபைனரி செயல்பாடுகளின் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த கட்டுப்பள்ளி டீசாலினேஷன் நிலையத்திற்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 17.6-MW காற்றாலை உருவாக்கப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications