தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்த்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல முயற்சிகள் எடுத்து வரும் வேளையில், சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டம், டாவோஸ்-ல் நடந்த உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் தமிழ்நாட்டு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தனது எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பையும், ஏற்றுமதியையும் மேம்படுத்தும் மாபெரும் திட்டத்திற்கு வலிமையான அடித்தளம் அமைக்கும் முயற்சியில் அமெரிக்காவின் பிரபலமான கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தை அழைத்து வந்தது.

2023 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் தெலுங்கானா அரசு அமெரிக்காவின் Corning Inc நிறுவனம் தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதாக அறிவித்த நிலையில், அடுத்த சில வாரத்திலேயே தெலுங்கானா எல்லாம் நமக்குச் சொட்டாகாது என முடிவு செய்துவிட்டது.
இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன் தயாரிக்கும் தமிழ்நாடு தான் சரி என முடிவு செய்து தமிழ்நாட்டை இந்நிறுவனம் முதலீடு செய்யத் தேர்வு செய்தது.
இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் குளோபல் இன்வெஸ்டார் மீட் கூட்டத்தில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் Corning Inc நிறுவனம் இந்த மாபெரும் எலக்ட்ரானிக்ஸ் கிளாஸ் தயாரிப்பு தொழிற்சாலையைச் சென்னைக்கு அருகில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி தளம் அமைக்கப்படும்.
அமெரிக்காவின் Corning இந்தத் தொழிற்சாலையைத் தனி ஆளாக அமைக்கவில்லை, தனது இந்திய கூட்டணியான Optiemus Infracom உடன் இணைந்து சுமார் 1003 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில் கட்டமைக்க உள்ளது. இந்த Optiemus Infracom நொய்டா-வை சேர்ந்த நிறுவனமாகும்.
பிள்ளைப்பாக்கம் SIPCOT பகுதியில் அமைக்கப்படும் இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கிளாஸ் ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிகளவில் சப்ளை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு அமைப்பான சிப்காட் 15 மாவட்டத்தில் 24 தொழிற்பூங்காவை உருவாக்கி நிர்வாகம் செய்வது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் வர்த்தகம் செய்ய வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகளைச் செய்துக்கொடுக்கிறது. இது மட்டும் அல்லாமல் 6 துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கும் பணிகளிலும் தற்போது சிப்காட் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 11 சிப்காட் பகுதிகள் தொடர்ந்து மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் 3 புதிய தொழிற்பூங்கா உருவாக்கும் பணிகளில் சிப்காட் நிர்வாகம் இறங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி பெரம்பலூரில் இருக்கும் இறையூர் சிப்காட், ராணிப்பேட்டையில் இருக்கும் பணப்பாக்கம் சிப்காட், ஓசூரில் உள்ள சூளகிரி ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகளைச் செய்யச் சிப்காட் டென்டர் விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இறையூர், பணப்பாக்கம், சூளகிரி சிப்காட் பகுதிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டு முதல்வர் GIM2024 முடிந்தும் தொடரும் முதலீடுகள் வருகிறது என கார்னிங் இன்க் நிறுவனத்தின் 1003 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தம் குறித்து தெரிவித்தார்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications