அண்மை காலமாக ஐடி மற்றும் டெக் வேலைகள் அனைத்தும் பணி பாதுகாப்பறவையாக மாறிவிட்டன. வழக்கமாக ஐடி வேலை என்றாலே நல்ல சம்பளம் , ஆன்சைட்டுக்கு அமெரிக்கா செல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் அப்படி கிடையாது.
ஏஐ தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தது முதலே நிறுவனங்கள் எதற்கெடுத்தால் ஏஐ காரணம் கூறி ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிடுகின்றன. இதனால் ஐடி ஊழியர்களுக்கு எல்லாம் எப்போதுமே பணிநீக்கம் என்ற கத்தி தொங்குகிறது. கடந்த ஆண்டில் கூட இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

ஐடி நிறுவனங்கள் பாரபட்சமில்லாமல் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் தொடங்கி நீண்ட காலம் நிறுவனத்திற்காக வேலை செய்தவர்கள் வரை பணி நீக்கம் செய்து வருகின்றன. ஏஐ பயன்பாடு, திறன் மேம்பாடு, நிறுவன மறுசீரமைப்பு, செலவு குறைப்பு என பல காரணங்களை கூறுகின்றன. இந்த திடீர் பணிநீக்கம் என்பது ஒவ்வொரு வயதினரையும் ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது.
அந்தவகையில் சென்னையை சேர்ந்த ஒரு டெக்கி 13 ஆண்டுகளாக தான் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும் தன்னை திடீரென வேளையில் இருந்து நீக்கி விட்டார்கள் என்றும் வெளியிட்டு இருக்கக்கூடிய ரெடிட் பதிவு பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. 36 வயதான அந்த டெக்கி ரெடிட் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் நான் ஒரு ஐடி நிறுவனத்தில் QA நிபுணராக 13 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.

13 ஆண்டுகள் இந்த நிறுவனத்திற்காக உழைத்திருக்கிறேன் எனக்கு சம்பள உயர்வு கொடுங்கள் என்று கூட நான் இவர்களிடம் டிமாண்ட் செய்தது கிடையாது. பெற்றோர் உடல்நிலை காரணமாக என்னால் வேறு நகரங்களுக்கும் செல்ல முடியாமல் போய்விட்டது. ஆண்டுக்கு எனக்கு 8.9 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். திடீரென இன்று என்னை அழைத்து உங்கள் வேலையை ராஜினாமா செய்து விடுங்கள் என கூறுகிறார்கள். ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து எனக்கு வேலை இல்லை எனக் கூறியிருக்கிறார்கள் என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
யாராவது தயவுசெய்து எனக்கு அடுத்த வேலை பெறுவதற்கான அறிவுரைகளை கூறுங்கள், உங்களுடைய பரிந்துரை எனக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. ஏராளமானவர்கள் அடுத்த வேலை கிடைப்பதற்குள் உங்களுடைய திறமைகளை ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கி இருக்கின்றனர். பல்வேறு நிறுவனங்களும் அவர்களே ஏஐ பயிற்சி வழங்கி வேலைக்கும் எடுத்துக் கொள்கிறார்கள் அது போன்ற நிறுவனங்களை தேர்வு செய்யுங்கள் என அறிவுரை கூறியுள்ளனர்.
ஐடி நிறுவன வேலைகளை பொறுத்தவரை தற்போது வேலைகளை தக்க வைத்து கொள்ள வேண்டுமென்றால் திறன் மேம்பாடு மட்டுமே கை கொடுக்கும் குறிப்பாக ஏஐ சம்பந்தப்பட்ட திறன்களை வளர்த்து கொண்டால் வேலையை தக்க வைத்து கொள்ளலாம் என்பதோடு பதவி உய்ரவு சம்பள உயர்வு ஆகியவையும் கிடைக்கும். முன்பை போல வேலை கிடைத்துவிட்டது லைஃப் செட்டிலாகிவிட்டது என்பதெல்லாம் இந்த காலத்திற்கு பொருந்தாத ஒன்றாக மாறிவிட்டது.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications