சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து வரும் வேளையில் பலர் நேரம், பணம் என எதையும் பார்க்காமல் மக்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும் வீடியோவாகும், புகைப்படங்களாகப் பார்க்கும் போது மனம் நெகிழ்கிறது. பல நிறுவனத் தலைவர்கள், பணக்காரர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துவருகின்றனர்.
ஆனால் இந்தச் சூழ்நிலையிலும் சிலர் மக்களிடம் கூடுதல் பணத்தைச் சம்பாதிக்கவே முயல்கின்றனர். இது தொடர்பாகப் பல பதிவுகள் இணையத்தில் உலா வந்துகொண்டு வருகிறது, இதனால் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்த பதிவில் சங்கீதா என்பவர் டிவிட்டரில் செய்த பதிவில் சென்னையில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் மக்களின் இந்த மோசமான நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். வெறும் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு 1000 ரூபாய் கேட்கிறார்கள் எனப் பதிவிட்டு உள்ளார்.
இவருடைய பதிவுக்குப் பலரும் வருத்தம் தெரிவித்த வேளையில் தேவேந்திரன் பழனிசாமி என்பவர் எக்ஸ்ப்ளாய்ட் பண்ணும் ஆட்டோ ட்ரைவர்ஸ் களத்தில் நிக்கிறாங்க, ஆட்டோ தண்ணீல சிக்கிச்சினா ஏற்படும் பாதிப்புகள் அவர்கள் தலையில் தான். ஆனா இந்தக் கார்ப்ரேட் டேக்சி வாலாக்கல் கைவிட்டுட்டு ஓடிட்டாங்க, இக்கட்டான நேரத்தில் காணாமல் போவோருக்கும், கூட இருப்போருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு எனப் பதிவிட்டு உள்ளார்.
இதேபோல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைப் புதியதலைமுறை தொலைக்காட்சி பேட்டி எடுக்கையில், வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளதால் அருகில் OMR சாலையில் இருக்கும் ஹோட்டலில் தங்குவதற்காக விசாரிக்கும் போது அனைத்து ஹோட்டல்களிலும் ஒரு நாளுக்கு 20000 ரூபாய் வாடகை கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் நிர்வாகத்திடம் கொஞ்சம் டிஸ்கவுன்ட் செய்யக் கோரினாலும் மனிதாபிமானம் இல்லாமல் பிஸ்னஸ் தான் முக்கியமாகப் பார்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் செக் செய்யும் போது விலை குறைவாக இருந்தாலும் புக் செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
இதேவேளையில் பல தனிநபர்கள் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுடைய வீட்டில் தங்கிக்கொள்ள முகவரி, போன்நம்பர் ஆகியவற்றைப் பதிவிட்டு உள்ளனர். இதேபோல் பல ஆட்டோ ஓட்டுநர்களும் மக்கள் உதவி செய்துள்ளனர், ஒரு சிலரின் தவறுகள் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications