சென்னையில் மிக்ஜாம் புயலால் அனைத்து விதமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது, விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருக்கும் காரணத்தால் விமானச் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் முக்கியமான பல பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் இடுப்பு அளவில் தேங்கி கிடக்கிறது.

இதனால் பல லட்சம் மக்களின் கார், பைக், சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் மழைநீரில் மூழ்கியுள்ளது. உங்கள் கார், பைக் சைலென்சர் தாண்டி இன்ஜின் வரையில் மழைநீரில் மூழ்கியிருந்தால் இதை மட்டும் செய்திடாதீர்கள்.
கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தில் வாங்கிய கார், பைக் மழை வெள்ளத்தில் மூழ்கியதைப் பார்க்கும் போது யாராக இருந்தாலும் கஷ்டமாகத் தான் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் தான் நிதானமாகவும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.
மழை நீரில் மூழ்கிய காரை பதட்டப்பட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்வது தான் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு. கார் அல்லது பைக் மழை நீரில் மூழ்கி இருந்தால் முதலில் செய்ய வேண்டியது இன்சூரன்ஸ் கிளைம் செய்வதற்கான ஆவணங்களைச் சேகரிப்பது தான்.
மழை நீரில் மூழ்கிய கார் அல்லது பைக்-ஐ ஸ்டார்ட் செய்தால் காரின் இன்ஜினில் மழைநீர் சென்று இருக்கும் பட்சத்தில் நீங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது காரின் எஞ்சினை சேதப்படுத்தும்.
அப்படி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து இன்ஜின் சேதம் அடைந்தால் அதற்குக் கார் இன்சூரன்ஸ் கீழ் கிளைம் செய்ய முடியாது. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் செய்யக்கூடிய ஒன்று, நீரில் மூழ்கிய காரின் புகைப்படம், காரில் சேதமடைந்த பகுதியை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது தான்.
இந்தப் புகைப்படம் இன்சூரனஸ் க்ளைம் செய்யும் போது ஆவணமாகச் சமர்பிக்கவும், இதன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எளிதாகப் பிராசஸ் செய்யவும், இன்சூரன்ஸ் கிளைம் பணியில் ஏதேனும் பிரச்சனை வரும் பட்சத்தில் ஆதாரமாகக் காட்டி அப்ரூவல் பெறுவது எளிதாகும்.
மழை நீர் வடிந்த உடன் மீண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, பைக் ஆக இருந்தால் தள்ளிக்கொண்டும், கார் ஆக இருந்தால் டோவிங் செய்துக்கொண்டும் அங்கிகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் விடவும், இந்த நேரத்தில் மற்ற சர்வீசஸ் சென்டரில் கொடுத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications