தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கனமழையைக் கருத்தில் கொண்டு, சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்குச் சென்னை வானிலை ஆய்வு மையம் செம்புர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு இம்மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பெய்த மிகப்பெரிய மழையையொட்டி, சென்னை மக்கள் மிகுந்த கவலையிலும், சிக்கலிலும் மாட்டிக்கொண்ட நிலையில், மக்கள் தங்கள் கார்களை இன்றே வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்க துவங்கியுள்ளனர். இயற்கையின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்த முறை மழை கணிப்பை காட்டிலும் அதிகப்படியான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கருத்து நிலவுகிறது. இப்படியிருக்கும் வேளையில்
மழை வெள்ளத்தில் உங்கள் கார், பைக் மூழ்கிவிட்டதா? கவலை வேண்டாம். உங்கள் வாகனத்திற்கான காப்பீடு மூலம் நீங்கள் இழப்பை ஈடு செய்ய முடியும். ஆனால் மழை வெள்ளத்தில் மூழ்கிய அல்லது இன்ஜின் வரையில் தண்ணீர் இருக்கும் வாகனங்கள், மழை வெள்ளத்தால் டேமேஜ் ஆன கார், பைக் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் முன்பு சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டியது கட்டாயம்.
வாகன காப்பீட்டு திட்டங்கள்: பெரும்பாலான வாகன காப்பீட்டு திட்டங்கள் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு வழங்குகின்றன. இருப்பினும், உங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறைகளை கவனமாகப் படிப்பது முக்கியம். சில திட்டங்கள் கூடுதல் பிரீமியம் செலுத்தி வெள்ள சேதத்திற்கான காப்பீட்டை சேர்க்கும் வசதியை வழங்கலாம்.
இன்சூரன்ஸ் கிளைம் எப்படி செய்வது?:
நீரில் மூழ்கிய காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்: முதல் முக்கியமான பணி, உங்கள் நீரில் மூழ்கிய காரை பதட்டப்பட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். காரின் இன்ஜினில் மழைநீர் சென்று இருந்தால் நீங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது காரின் எஞ்சினை சேதப்படுத்தும் என்பதால் அவ்வாறு செய்வதைத் தவிர்க்கவும்.
அப்படி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து இன்ஜின் சேதம் அடைந்தால் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாது. அத்தகைய நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய ஒன்று, நீரில் மூழ்கிய காரின் புகைப்படங்களைக் கிளிக் செய்வது.
புகைப்படங்களை எடுக்கவும்: வாகனத்தின் அனைத்து கோணங்களிலிருந்தும் தெளிவான புகைப்படங்களை எடுத்து வைக்கவும். இது காப்பீட்டு நிறுவனத்திற்கு சேதத்தின் அளவை கணக்கிட உதவும்.
காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்: உங்கள் காப்பீட்டு நிறுவனத்தின் அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்து தெரிவிக்கவும்.
தேவையான ஆவணங்களை சேகரிக்கவும்: காப்பீட்டு கோரிக்கை படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களான வாகன பதிவுச் சான்று, காப்பீட்டு பாலிசி விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்கவும்.
வாகனத்தை மதிப்பீடு செய்ய அனுமதிக்கவும்: காப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வாளர் வந்து வாகனத்தை பரிசோதித்து, சேதத்தின் அளவை மதிப்பிடுவார். இல்லையெனில் காப்பீட்டு நிறுவனம் வாகனத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை விளக்குவார், அதன்படி பாலோ செய்து இயங்க வேண்டும்.
கடைசி ஸ்டெப்: காப்பீட்டு நிறுவனம் வாகனத்தை சரிசெய்ய தேவையான பட்டியலை வழங்கும். காப்பீட்டு நிறுவனம் சேதத்திற்கான தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும்.
வாகனங்கள் சேதம் ஏற்பட்ட உடனேயே காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்வது முக்கியம். அதை தொடர்ந்து காப்பீட்டு கோரிக்கை செயல்முறையில் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் முன்கூட்டியே பாதுகாப்பாக வைத்திருங்கள்.
உங்கள் காப்பீட்டு திட்டத்தின் விதிமுறைகளை கவனமாகப் ஒரு முறை படித்து, இன்சூரனஸ் கிளைம் குறித்த தெளிவான புரிதலைப் பெறுங்கள். காப்பீட்டு மதிப்பீட்டாளர் வரும் வரை பாதிக்கப்பட்ட வாகனத்தை நகர்த்த வேண்டாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications