சென்னையில் பெய்து வரும் மழையால், சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டது, சில இடத்தில் தண்ணீர் வீட்டிற்குள்ளும், அப்பார்ட்மெண்ட்-க்குள்ளும் புகுந்தது. இந்த நிலையில் மக்கள் 2023 ஆம் ஆண்டு மழை வெள்ளம் போல் இந்த முறையும் நடக்கும் என நம்பினர். இதற்கு ஏற்றார் போல் வானிலை ஆய்வு மையமும் ரெட் அலர்ட் அறிவித்தது.
இதனால், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களைத் தேட துவங்கினர். குறிப்பாக, சென்னையில் இருக்கும் ஐடி ஊழியர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த மழை காலத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பது மட்டும் அல்லாமல் எந்த நேரமும் பணிபுரிய மின்சாரம், வைஃபை, தண்ணீர் மற்றும் வாகன நிறுத்த பார்க்கிங் வசதிகளை தேடி ஹோட்டல்களில் தங்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு இதேபோல மிக்ஜாம் புயல் வந்த போது பல ஆயிரம் மக்கள் ஹோட்டல்களுக்கு அவசர அவசரமாக வெள்ளம் வந்த பின்பு ஓடினர். ஆனால் இந்த முறை உஷாராக வெள்ளம் வருவதற்கு முன்பே ஹோட்டலுக்கு படையெடுத்துவிட்டனர். இதிலும் குறிப்பாக சென்னையில் இருக்கும் ஆடம்பர ஹோட்டல்களில் அதிகப்படியான மக்கள் ரூம் புக் செய்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து GRT ஹோட்டல்களின் சிஇஓ விக்கிரம் கோத்தா கூறுகையில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்த மக்கள் அதிக தொகையை செலவழிக்கத் தயாராக உள்ளனர். இந்த வாரம் டி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், குறிப்பாக வாகனத்தை நிறுத்துவதற்காக மட்டுமே ஒரு நாளுக்கு 8000 ரூபாய் செலவு செய்ய தயாராகிப் பல ரூம்களை முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், மீண்டும் வெள்ளம் வரும் என்ற அச்சத்தில் ஹோட்டல்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களான தாஜ் கன்னமரா, தாஜ் கோரமண்டல் ஆகியவற்றில் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன.
தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மட்டும் செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் ரூம் புக்கிங் 15% அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையில் குடும்பங்கள் முன்பதிவு செய்துள்ளன. இக்காலகட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து புக் செய்யப்பட்ட பல ரூம்கள் சென்னை மழை காரணமாக கேன்சல் செய்யப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்கள் அதிகப்படியாக புக் செய்த காரணத்தால் இழந்த வர்த்தகத்தை தாஜ் ஹோட்டல்கள் திரும்ப பெற்றுள்ளது.
சென்னை மழை நாட்களில் ஹோட்டல் புக்கிங் குறித்து தாஜ் சென்னையின் விற்பனை பிரிவின் தலைவர் ரொனால்ட் மெனெசஸ் கூறுகையில் "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் பிக்அப் ஏற்பாடு செய்து வருகின்றோம். மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏராளமான புக்கிங் ரெக்வஸ்ட் எங்களுக்கு வந்துள்ளன" என்று கூறினார்.
சென்னையில் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கார்ப்ரேட் ஆஃபரில் ஹோட்டல்களில் ரூம் செய்து வருவதாகவும், தாஜ் வெலிங்டன் மெவ்ஸ் மற்றும் விவான்டா ஆன் OMR ஆகியவற்றில் பெரிய அளவிலான நிறுவன முன்பதிவுகளுக்கு பங்களிப்பு செய்துள்ளது.
சென்னையில் மட்டும் 3 லட்சம் டெக் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மழை வெள்ள காலத்தில் பாதுகாப்பான சூழ்நிலையில் பணியாற்றுவதற்கான இடம் தேவை என்பதால் நிறுவனத்தின் வாயிலாகவே புக்கிங் செய்யப்பட்டு வருவதாக ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள ஹையாத் ரீஜென்சி ஹோட்டலிலும் இந்த வாரத்தில் அதிகப்படியான ரூம் புக்கிங் கோரிக்கை வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 9% முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன என சென்னையின் பொது மேலாளர் ரூபன் தாஸ் கூறினார். குறிப்பாக அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு ரூம் கேட்டு அழைப்புகள் வருவதாக தெரிவித்தார்.
இந்த ஆடம்பர ஹோட்டல்களில் ரூம் புக் செய்வது ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல பல குடும்பங்களும் புக்கிங் செய்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications