சென்னை மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சக மனிதர்கள் ஆர்வமாக முன்வந்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. குறிப்பாகப் படகுகளை வைத்திருக்கும் மக்கள் தானாக முன்வந்து தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களை எவ்விதமான பண உதவியும் எதிர்பார்க்காமல் காப்பாற்றி வருகின்றனர்.
திங்கட்கிழமை மாலையில் இருந்து டிவிட்டரில் பலர் பெரிய வாகனங்களை யாரேனும் வைத்துள்ளீர்களா..?, உணவளிக்கவும், மீட்புப் பணிக்கான பெட்ரோல் செலவுகளை ஏற்றுக்கொள்ளத் தயார் எனக் கோரிக்கைகள் பறந்து வருகிறது. அரசின் உதவிகள் வருவதற்குள் உணவு, மீட்பு பணிகளுக்காக மக்கள் வேகமாகக் களத்தில் இறங்கினர்.

தண்ணீர் மார்பு அளவுக்கு உயர்ந்த இடத்தில் தற்போது படகு மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் பல அமைச்சர்கள் டிவிட்டர் வாயிலாக மீட்பு கோரிக்கைகளை ஏற்று மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற உதவி செய்துவருகின்றனர்.
An Instagram post from Chennai that was forwarded to me… A sighting of an amphibious creature… pic.twitter.com/pYIl2bZ2kj
— anand mahindra (@anandmahindra) December 5, 2023
இந்த நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் தனது நிறுவனத்தின் பெருமைமிக்கத் தயாரிப்பான மஹிந்திரா தார் கார் சென்னை மழைநீர் தேங்கிய இடத்தில் பயணிக்கும் வீடியோவை பதிவிட்டு மெய்சிலிர்த்துள்ளார்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் விரும்பும் வாகனமாக இருக்கும் மஹிந்திரா தார் 4 வீல் ட்ரைவ் திறன் கொண்டதாக இருந்தாலும் இன்ஜின் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் இருந்தாலும் இயங்கும் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோ வாயிலாகச் சென்னை மக்கள் மத்தியில் மஹிந்திரா தார் வாகனம் கூடுதலாகப் பிரபலம் அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications