தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய கனமழை திங்கட்கிழமை இரவு முதல் பெய்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் வேகமாக வடிந்தாலும், இன்னும் சில பகுதிகளில் சாலையிலும், பொது வழியிலும் மழை நீர் முடங்கிக்கிடக்கிறது.
கடந்த ஆண்டு பெய்த மழை சென்னை மக்களின் வீடு, கார், பைக், வீட்டில் இருக்கும் பொருட்கள் என அனைத்தையும் சேதப்படுத்திய நிலையில், இந்த வருடம் ரெட் அலர்ட் வந்த உடனேயே மக்கள் பெரிய மழை வெள்ளத்திற்குத் தயாராகினர். இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையில் சென்னையின் முக்கிய பகுதியான சோழிங்கநல்லூர், பெருங்குடி மக்களை ஒரு இடி நடுநடுங்க வைத்ததது.

இதைச் சரியான நேரத்தில் ஒருவர் படம் பிடித்து டிவிட்டரில் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் தற்போது பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
இந்த வீடியோ மட்டும் அல்லாமல் டிவிட்டர் முழுக்க மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் முதல் மழை தொடர்பான பல பதிவுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதோடு தமிழக அரசும், சென்னை கார்ப்ரேஷனும் மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான உதவிகளைப் பெறவும், அளிக்கவும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை நகர வாழ்க்கையை பாதித்துள்ளது. நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, மணலி பகுதியில் 9.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, பிற பகுதிகளில் 6 சென்டிமீட்டர் வரையிலான மழை பதிவாகியுள்ளது,
இந்த கனமழைக்கு காரணம் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியே. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், மின்சாரம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து மழை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. பொதுமக்கள் வானிலை செய்திகளை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications