சென்னை மழையின் ருத்ர தாண்டவம் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது, பணக்காரர்கள், ஏழை மக்கள், பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என வேறுபாடு இல்லாமல் பாதித்துள்ளது. சமுக வலைத்தளத்தில் ஒருபக்கம் மக்கள் உதவிகளைத் தொடர்ந்து கேட்டு வரும் வேளையில் ஒருபக்கம் இயல்பு நிலை திரும்பியதால் அலுவலகம் செய்யத் துவங்கியுள்ளனர்.
இதேபோன்ற சம்பவம் தான் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது, பெங்களூரில் பெய்த கனமழை காரணமாகப் பல ஆடம்பர குடியிருப்புகள் மழை வெள்ளத்தில் மூழ்கியது, பல ஆடம்பர கார்கள் தண்ணீர் மூழ்கியது, ஐடி ஊழியர்கள் JCB இயந்திரத்தில் வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் சென்றனர்.

இதற்கு மத்தியில் சென்னையின் தொழிற்பேட்டையான அம்பத்தூர் பகுதியில் இருக்கும் சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் மார்பு அளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் அம்பத்தூர் ஏரி வழியாகத் தான் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மழை நீர் வடியும்.
இதனால் 3வது நாளாக அம்பத்தூர் பகுதியில் இன்றும் பல தொழிற்சாலைகள் தண்ணீரில் மிதக்கிறது, தொழிற்சாலையில் இருக்கும் ஒவ்வொரு இயந்திரமும் பல லட்சம் மதிப்புடையது என்பதால் சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் உரிமையாளர்கள் இந்த இழப்பை எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் எனத் தெரியாமல் புலம்பி வரும் வீடியோ, டிவிட்டர் பதிவுகள் ஏராளமாக இணையத்தில் உள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் இன்று காலையில் பாடி-யில் இருக்கும் டிவிஎஸ் தொழிற்சாலையின் புகைப்படம் வெளியானது. டிவிஎஸ் தொழிற்சாலை நுழைவு வாயிலில் இருந்து தொழிற்சாலையின் இறுதி வரையில் இடுப்பு அளவுக்கு மழை நீர் தேங்கி இருக்கிறது.
இதனால் லூகாஸ் டிவிஎஸ் தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்கள், உதிரிபாகங்கள், உற்பத்தி பொருட்கள் அனைத்தும் மழைநீர் மூழ்கியுள்ளது. பொதுவாகப் பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற இயற்கை பேரிடர் பிரச்சனையைச் சமாளிக்க இன்சூரன்ஸ் பாதுகாப்பு வைத்திருக்கும்.
அடுத்த சில நாட்களுக்குப் பாடி லூகாஸ் டிவிஎஸ் தொழிற்சாலையின் உற்பத்தி பாதிக்கும், ஆனால் இதைச் சமாளிக்கும் வகையில் பிற தொழிற்சாலையில் உற்பத்தியை ஈடு செய்ய முயற்சி செய்யலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications