சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது வாகனங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக பலதரப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். இதில் முக்கியமானது வேளச்சேரி பிரிட்ஜ்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் பெய்த கனமழையின் போது, வேளச்சேரி ஏரி நிரம்பி வழிந்ததால், இந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. பல நூறு வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்த முறை ரெட் அலர்ட் வந்த உடனே மக்கள் தங்களது வாகனங்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வந்தனர்.

ஆனால் இன்னும் சிலர், குறிப்பாக அப்பார்ட்மென்ட் வீடுகளில் வாழும் மக்கள் ஒரு படிக்கு மேல் சென்று, பார்க்கிங்-ல் இருக்கும் இரு சக்கர வாகனங்களை ஒவ்வொரு ப்ளோரிலும் அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மழையில் சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது மட்டும் அல்லாமல் பல ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பல்லாயிரம் கார்கள், பைக்குகள் மழை வெள்ளத்தில் மூழ்கியது. பல கார்கள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் மக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல தயார்.

இதன் வாயிலாகவே நேற்று வேளச்சேரி பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குப் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தும் கார்களை அகற்ற மறுப்பு தெரிவித்தது. தற்போது பைக்குகளை லிப்ட் வாயிலாக மேல் தளத்திற்கு கொண்டு செல்லுவது வரையில் நடக்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைத்தாலும் முழு பணிகளுக்கு கிடைப்பது இல்லை, இதேபோல் கிளைம் தொகையை பெறுவதற்குள் பெரிய தலைவலியாக உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை ரிப்பேர் செய்ய இன்சூரன்ஸ் கிளைம் தாண்டி 30000 முதல் 1 லட்சம் வரையில் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications