சென்னையில் உள்ள ஒரு ரேபிடோ பயணி, தனது பகுதியில் நீர் தேங்கியிருப்பதை காரணம் காட்டி தன்னிடம் இரட்டிப்பு கட்டணம் வசூலித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். AJ ஸ்கில் டெவலப்மென்ட் அகாடமியின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான அசோக் ராஜ் ராஜேந்திரன், என்பவர் ரேபிடோ புக் செய்துள்ளார். சுமார் 21 கிலோமீட்டர் தூர பயணத்திற்காக அப்ளிகேஷனில் ரூ.350 கட்டணமாக காட்டப்பட்ட போதிலும், தன்னிடம் அந்த ரேபிடோ டிரைவர் ரூ.1,000 கேட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜேந்திரன் புகார் அளித்த போதும் நிறுவனம் சாட்டை எந்த வித பதிலும் இன்றி முடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது லிங்க்டின் பதிவில், ராஜேந்திரன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள துரைப்பாக்கம் வரை செல்ல ரேபிடோ முன்பதிவு செய்ததாகவும், ஆப்பில் காட்டப்பட்ட கட்டணம் ரூ.350 ஆக இருந்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த டிரைவர் ரூ.1,000 கேட்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும் அதிகமாக கட்டணம் கேட்டதற்கு ரேபிடோ டிரைவர் அந்த பகுதியில் நீர் தேங்கி இருப்பதை காரணம் காட்டியுள்ளார். 1000 கேட்ட இடத்தில் ராஜேந்திரன் கட்டணத்தை 800 ரூபாயாக குறைத்துள்ளார். இருந்தாலும் இது அப்ளிகேஷனில் காட்டப்பட்ட கட்டணத்தை விட 2 மடங்கு அதிகம் தான்.
அதன் பிறகு தான் சென்னையைச் சேர்ந்த இந்த சிஇஓ தனது சவாரியின் போது எந்தவித தண்ணீரும் தேங்கவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளார். "நான் இந்த சிக்கலை ரேபிடோவுக்கு புகார் அளித்தபோதும் அவர்கள் ஓட்டுனரின் செயல்களைப் பற்றி கூட விசாரிக்காமல் சாட்டை க்ளோஸ் செய்துவிட்டனர்", என்று தனது லிங்க்டின் பதிவில் ராஜேந்திரன் எழுதியுள்ளார்.
ரேப்பிடோ வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு பேசிய சாட் ஸ்கிரீன்ஷாட்டை ராஜேந்திரன் பகிர்ந்திருந்தார். அதில் இறங்கிய இடத்தில் முரண்பாடு இருப்பதாக ரைட் ஹைலிங் ஆப்-பில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. ராஜேந்திரன் வித்தியாசம் வெறும் 100 மீட்டர் தூரம் மட்டுமே என்றும், 100 மீட்டருக்கு 100 சதவீத கூடுதல் கட்டணமா? என்றும் அந்த கஸ்டமர் சர்வீஸ் அதிகாரியிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலாக இறங்கிய இடத்தில் முரண்பாடு இருப்பதாக கூறி கஸ்டமர் சர்வீஸ் அதிகாரி சாட்டை முடித்து விட்டார்.
"உங்கள் ஓட்டுநர்கள் கூடுதல் ஊதியம் கேட்பதை பற்றி நீங்கள் கவலைப்படவில்லை என்றால்.. ஓட்டுநர் கூடுதல் ஊதியம் கேட்டாரா என்று கேட்கும் விருப்பத்தை ஏன் வழங்கி இருக்கிறீர்கள்? இது வெறும் வெளித்தோற்றத்திற்காகவா?", என்று கோபமடைந்த ராஜேந்திரன் கேட்டிருந்தார்.
ராஜேந்திரனின் இந்த பதிவுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைத்தது விரைவில் ராபிடோ கஸ்டமர் சர்வீஸ் அவரை தொடர்பு கொண்டு சிக்கலை தீர்த்து வைத்தனர் மேலும் கூடுதல் கட்டணம் அவருடைய ராப்பிடோ வாலட்டுக்கு மாற்றப்பட்டது


Click it and Unblock the Notifications