சென்னை-யைத் தலைமையிடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், சுமார் ரூ.1100 கோடி திரட்டும் திட்டத்துடன் ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் பட்டியலிட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI-யிடம் தனது DRHP அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
காசாகிராண்ட் நிறுவனம் இந்த ஐபிஓ-வில் 2 முகமதிப்புடைய பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. இதோடு இந்த IPO-வில் 1000 கோடி வரையிலான புதிய பங்கு வெளியீடு மற்றும் 100 கோடி மதிப்பிலான பங்குகளை ப்ரோமோட்டர்கள் விற்பனை செய்ய உள்ளனர்.

சென்னையில் 2003 இல் நிறுவப்பட்ட கசாகிராண்ட் நிறுவனம் தற்போது எம்என் அருண் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது, கசாகிராண்ட் தனது வர்த்தகத்தைச் சென்னையில் இருந்து துவங்கினாலும், பின்னாளில் மாநிலத்தின் பல முக்கிய நகரங்களில் தனது வீட்டு கட்டுமான திட்டங்களை அறிமுகம் செய்தது. "கசாகிராண்ட்" என்ற பிராண்டின் கீழ் ஆடம்பரம், நடுத்தர மற்றும் மலிவு பிரிவுகளில் அப்பார்ட்மென்ட் மற்றும் வில்லாக்களையும் வழங்கி வருகிறது.
காசாகிராண்ட் நிறுவனத்தின் இந்த ஐபிஓ-வில் அருண் MN மற்றும் கசாகிராண்ட் லக்ஸர் பிரைவேட் லிமிடெட் தலா ரூ.50 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இந்த ஐபிஓ-வில் preferential offer பிரிவில் அதிகப்படியாக 20 சதவீத பங்குகளையும், QIB பிரிவு முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியாக 75 சதவீத பங்குகளையம், அதிகபட்சம் 15% பங்குகளை நிறுவனமற்ற முதலீட்டாளர்களுக்கும், அதிகபட்சம் 10% ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். முழுமையான விபரம் இனி தான் தெரியும்.
காசாகிராண்ட் தற்போது சென்னையில் மட்டும் இல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கோயம்புத்தூர் போன்ற தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களிலும் உள்ளது.
மே 31, 2024 நிலவரப்படி, காசாகிராண்ட் நிறுவனம் 21.45 மில்லியன் சதுர அடி கொண்ட 101 ரியல் எஸ்டேட் திட்டங்களை நிறைவு செய்துள்ளது. தற்போது 33.60 மில்லியன் சதுர அடி பரப்பில் 42 திட்டங்களில் பணியாற்றி வருகிறது. மேலும் 13.15 மில்லியன் சதுர அடி கொண்ட 17 புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
மே 31, 2024 நிலவரப்படி, காசாகிராண்ட் 825 பேர் கொண்ட சேல்ஸ் டீம் கொண்டுள்ளது, இதோடு NRI வாடிக்கையாளர்களை பெறவும், அவர்களுக்களுக்கான சேவையை மேம்பட்ட முறையில் அளிக்கவும் 2016 நவம்பரில் துபாயில் ஒரு அலுவலகத்தைத் திறந்தது.


Click it and Unblock the Notifications