திறமையும் ஆர்வமும் இருந்தால் எந்த போட்டியாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முடியும் என்பதற்கு பலரும் முன்னுதாரணமாக இருக்கின்றனர். அப்படி சென்னையை சேர்ந்த ஒரு 18 வயது மாணவி வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்.
தான்வி கார்த்திகேயன் என்பவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர். 18 வயதான இவர் 12ஆம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இவர் தேசிய அளவிலான ஆன்லைன் ஸ்டெம் போட்டியில் கலந்து கொண்டு ரஷ்ய விண்வெளி பயிற்சி நிலையத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பினை பெற்றிருக்கிறார்.

தேசிய அளவில் நடைபெற்ற இந்த ஆன்லைன் போட்டியில் கிட்டத்தட்ட 5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த ஐந்து லட்சம் பேரில் ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 5 நாட்கள் ரஷ்யா விண்வெளி வீரர்கள் பயிற்சி நிலையத்தை தங்கி இருந்து பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்வில் சென்னையை சேர்ந்த தான்வி வெற்றி பெற்று ரஷ்யாவுக்கு சென்று வந்துள்ளார்.
#WATCH | Chennai, Tamil Nadu | 18-year-old Dhaanvi Karthikeyan, the first Tamil Nadu student to visit Moscow’s Astronaut Training and Satellite Manufacturing Centre, returns to the country
— ANI (@ANI) October 23, 2025
Dhaanvi Karthikeyan says, "I have been extremely privileged to have been conferred with… pic.twitter.com/iuFHKWznFH
இந்த ஆன்லைன் போட்டியில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் இருந்து இந்த ரஷ்ய பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாணவி என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார் . ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற அவர் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மற்றும் செயற்கைக்கோள் உற்பத்தி மையத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளார்.
தன்னுடைய இந்த ஐந்து நாட்கள் பயணம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருக்கும் இந்த மாணவி , மாஸ்கோ சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று அங்கே எப்படி செயற்கைக்கோள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன , விண்வெளி வீரர்கள் எப்படி பயிற்சி செய்கிறார்கள் என்பன உள்ளிட்டவற்றை நேரில் பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் விண்வெளி திட்டங்களில் என்னென்ன தொழில்நுட்ப அம்சங்கள் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும் என்பது குறித்து அங்கிருந்த நிபுணர்களிடம் கலந்து உரையாடுவதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக தெரிவித்திருக்கும் அவர் தன்னுடைய கனவு நிறைவேறியதை போன்ற ஒரு உணர்வு வந்திருப்பதாக கூறி இருக்கிறார். குவாண்டம் மெக்கானிக்ஸ் பிரிவில் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் தன்னுடைய இந்த ஐந்து நாட்கள் பயணம் அதனை இன்னும் அதிகப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் .
தன்னுடைய பள்ளி படிப்பின் ஒரு பகுதியாக ஸ்டாண்ட் போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குவாண்டம் மெக்கானிக்ஸ் பிரிவில் இவர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்கிறார். இதன் மூலம் தனக்கு இயற்பியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரிவில் ஆர்வம் பிறந்ததாக கூறுகிறார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications