தமிழ்நாட்டில் நம்பிக்கையுடன் களமிறங்கி, பல சவால்களை சந்தித்து வளர்ந்த ஒரு புதுமையான நிறுவனம் தான் 'ஃப்ரேகேரியா' (Fragaria). தமிழ் மண்ணில் இருந்து உலகத் தரத்திலான தயாரிப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சவாலான தட்பவெப்ப நிலையிலும் பிரீமியம் ஸ்ட்ராபெர்ரிகளை வெற்றிகரமாக வளர்த்து, அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இந்நிறுவனம்.
இந்நிலையில், சென்னையில் இயங்கி வந்த 'ஃப்ரேகேரியா' (Fragaria) நிறுவனம், சில காரணங்களால் பெங்களூருக்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. ஃப்ரேகேரியா நிறுவனத்தின் நிறுவனர் ஹரிஷ் வரதராஜன் இந்த அறிவிப்பை சமூக வலைதளமான லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சென்னை எப்போதும் தங்கள் நிறுவனத்தின் முதல் தாயகமாக இருக்கும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

"ஃப்ரேகேரியா பெங்களூருக்கு மாறுகிறது!" என்று பதிவிட்ட வரதராஜன், தான் ஒரு தமிழனாக இருந்துகொண்டு, ஒரு உலகளாவிய தயாரிப்பைத் தமிழ்நாட்டில் இருந்தே உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு தமிழ் மகனாக, தமிழ்நாட்டில் இருந்தே உலகளாவிய தயாரிப்பை உருவாக்க நான் கனவு கண்டேன். நாங்கள் சென்னையில் அனைத்து முயற்சிகளையும் கொடுத்து, எல்லா தடைகளையும் தாண்டி, பிரீமியம் ஸ்ட்ராபெர்ரிகளை இங்கேயே வளர்க்க முடியும் என்பதை நிரூபித்தோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இடமாற்றம் ஏன்..?: சில நடைமுறை மற்றும் சூழலியல் காரணங்களால் இந்த இடமாற்றம் 'தவிர்க்க முடியாததாகிவிட்டது' என்று அவர் தெரிவித்துள்ளார். காலநிலை, சந்தை அணுகல், விவசாயத்திற்கு ஆதரவான சட்டங்கள், வெளிநாட்டுப் பணியாளர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல், வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை காரணமாக பெங்களூருவுக்கு மாறுவது தவிர்க்க முடியாதது ஆனது என ஹரிஷ் வரதராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், "சென்னை எப்போதும் எங்கள் முதல் தாயகமாக இருக்கும்," என்று கூறிய அவர், நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பண்ணை சென்னையில் தொடர்ந்து இயங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
எதிர்காலத்தில் மேலும் பல காரணங்களைக் கண்டுபிடித்து பண்ணைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். வரதராஜனின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து, பெங்களூருவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
இதேபோல, கடந்த மாதம் டிஜிட்டல் டிரக்கிங் தளமான பிளாக்பக் (BlackBuck) என்ற நிறுவனம், பெங்களூருவின் அவுட்டர் ரிங் ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மோசமான சாலைகள் காரணமாக தங்கள் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதாக அறிவித்தது. அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் குமார் யபாஜி, இந்தச் செய்தியை வெளியிட்டபோது, தனது அலுவலகத்தை 'வீடு' என்று குறிப்பிட்டு, உடைந்த இதய எமோஜியுடன் தனது பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications