சென்னை: மக்கள் தங்களுடைய வார இறுதி நாட்களிலும் கோடை விடுமுறை உள்ளிட்ட விடுமுறை காலங்களிலும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு சென்று குடும்பத்துடன் மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் ஏற்கனவே பல்வேறு பொழுது போக்கு பூங்காக்கள் இருக்கின்றன.
இருந்தாலும் வொண்டர்லா (wonderla ) நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது . ஏனெனில் தமிழ்நாட்டில் வொண்டர்லா நிறுவனம் அமைக்கும் முதல் பொழுது போக்கு பூங்கா இதுவாகும். சென்னை அருகே வொண்டர்லா நிர்வாகம் தன்னுடைய புதிய பொழுதுபோக்கு பூங்காவை அமைத்து வருகிறது. இந்த பொழுதுபோக்கு பூங்காவில் இந்தியாவின் பெரிய ரோலர் கோஸ்டர் கட்டப்பட்டிருக்கிறது. அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது .

தமிழகத்தில் சென்னை அருகே திருப்போரூர் அடுத்த இள்ளளூர் பகுதியில் 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் வொண்டர்லா நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.
First test ride at India's Largest Roller Coaster coming up at Wonderla Chennai...😍🎢
— Chennai Updates (@UpdatesChennai) May 26, 2025
pic.twitter.com/uTwyXZwJZw
பல்வேறு திரில்லிங்கான ரைடுகள் இங்கே கட்டப்பட்டிருக்கின்றன குழந்தைகள் மற்றும் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வொண்டர்லா கட்டுமான பணிகள் குறித்த அப்டேட் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் வொண்டர்லாவில் இந்தியாவின் பெரிய ரோலர் கோஸ்டர் வெற்றிகரமாக கட்டப்பட்டு முடித்திருப்பதாக அதன் நிர்வாக இயக்குனரான அருண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ்ட்ரா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் வொண்டர்லாவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டரில் சோதனை ஓட்டம் நடக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
புதிய ரோலர் கோஸ்டரில் சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது என அவர் கூறியிருக்கிறார். தற்போது பூங்கா கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு டிசம்பரிலேயே இது பயன்பாட்டிற்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்த வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது அது அமைந்துள்ள பகுதி ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் சுற்றுலா தலமாகவும் மாறும்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக தன்னுடைய பொழுதுபோக்கு பூங்காவை சென்னை அருகே அமைகிறது வொண்டர்லா நிறுவனம். மக்களை ஈர்ப்பதற்காக புது புது ரைடுகள் இங்கே அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் கொச்சி ,பெங்களூரு ,ஹைதராபாத், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் எல்லாம் பல வித்தியாசமான ரைடுகளுடன் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications