பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான செயின்ட் கோபைன், இந்தியாவின் முன்னணி கண்ணாடி தயாரிப்பாளர் மற்றும் வீட்டு வசதி சேவை நிறுவனமாக விளங்குகிறது. செயின்ட் கோபைன், தமிழ்நாட்டில் ஏற்கனவே பெரும் தொழிற்சாலையை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்து வரும் வேளையில், அடுத்தகட்டத்திற்குச் செல்ல 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8000 கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்தது. இதில் ஒருபகுதியாக 2023 அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசுடன் 3400 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதாக அறிவித்தது.
இந்த நிலையில் 3400 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்திற்குச் சென்னை அருகே உள்ள ஒரகடம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) 122.09 ஏக்கர் நிலத்தைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலம் சன்மினா தொழிற்சாலை பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தில், புதிய கிரீன்பீல்டு உற்பத்தி தொழிற்சாலை 3400 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளது.

இப்புதிய தொழிற்சாலையில் செயின்ட் கோபைன் சோலார், கிளாஸ் வுல் , சீலண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பல்துறை உற்பத்தி தளமாக இருக்கப்போகிறது. சுமார் 3400 கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்படும் செயின்ட் கோபைன், இத்தொழிற்சாலையில் 1150 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், இந்தியாவில் இந்நிறுவன தயாரிப்புகளுக்கு இகுக்கும் டிமாண்ட் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயின்ட் கோபைன் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் கண்ணாடித் தொழில் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்ற உள்ளது உள்ளது. குறிப்பாக சோலார் கிளாஸ் பிரிவில் பெரும் ஆதிக்கம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
செயின்ட் கோபைன் நிறுவனத்தின் இந்த முதலீடு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
பிரான்ஸ் நாட்டின் கண்ணாடி தயாரிப்பாளர் செயின்ட்-கோபைன் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான செயிண்ட்-கோபைன் இந்தியா வாயிாலகவே இந்த முதலீடுகள் வருகிறது. சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் பிற தொழிற்சாலைகள் மூலம் இந்திய வர்த்தகத்திற்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் தேவையான பொருட்களும் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உற்பத்தி துறை நிறுவனங்கள் வரும் காரணத்தால் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை நாட்டின் சராசரி அளவை காட்டிலும் குறைவாகவே உள்ளது. செயின்ட் கோபைன் முதலீடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்றாலும் விரைவாக முதலீடு செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு, வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவை அதிகரிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications