சென்னை தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்கிறது. பல GCC-களும் சென்னையை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தற்போது 2 நிறுவனங்கள் சென்னையில் தங்களுடைய அலுவலகங்களை விரிவுபடுத்தியுள்ளன. சமீபத்திய X தள தகவலின்படி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி லிமிடெட் மற்றும் அமெரிக்காவின் வெரைசன் ஆகிய நிறுவனங்கள், சென்னையில் தங்களது அலுவலக இடங்களை விரிவாக்கியுள்ளன.
ஹிட்டாச்சி எனர்ஜி, தனது தற்போதைய அலுவலகமான காமர்சோன் போரூரில் மேலும் 90,000 சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. சென்னையில் செயல்படும் இந்த நிறுவனம் ஏற்கனவே மிகப்பெரிய ரிசர்ச் மற்றும் டெவலப்மென்ட் மையமாக செயல்பட்டு வருகிறது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இதேபோல், தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமான வெரிசன், ஒலிம்பியா பார்க்கில் 45,000 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் காரணமாக வெரிசன் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய செயல்பாட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வந்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவும். அதேபோல தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நிறுவனங்களாலும் சென்னையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பல்வேறு முன்னணி IT நிறுவனங்களும் பணி நீக்கங்களை செய்து வரும் நிலையில் தற்போது இந்த 2 நிறுவனங்கள் தங்களுடைய விரிவாக்கத்தை அறிவிப்பதால் டெலிகாம் மற்றும் ரிசர்ச் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சென்னைக்கு புதிய நிறுவனங்கள் படையெடுத்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களும் தங்களுடைய வர்த்தகத்தை விரிவாக்க தொடங்கியுள்ளது. இதனால் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதியில் அலுவலகம் மற்றும் ரியல் எஸ்டேட்டுக்கான தேவை வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இந்த விரிவாக்கம் மட்டுமின்றி கோயம்பத்தூரிலும் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் எல்காட் ஐடி பார்க்கை வருகின்ற நவம்பர் 4-ஆம் தேதி அன்று திறந்து வைக்க உள்ளார். இந்த ஆறு மாடி கட்டிடம் சுமார் 2.66 லட்சம் சதுர அடியில் இயங்கவுள்ளது. சுமார் ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 14,000-த்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இது போன்ற வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications