தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை-யில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் எங்குத் திரும்பினாலும் வான் அளவு உயர்ந்த கட்டிடங்கள், இப்படிக் கட்டப்படும் பெரிய பெரிய கட்டிடங்கள் பெரும்பாலானவை அலுவலக கட்டிடங்களாக உள்ளது.
சென்னையின் 8 திசைகளிலும் புதிய மற்றும் பெரிய கட்டுமான திட்டங்கள் செயல்பட்டு வரும் இதேவேளையில் அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னையில் தனது அலுவலகத்தை அமைத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் சென்னைக்கு இடம்பெயர்கிறார்கள்.

இதற்காக மக்களின் நலன், வசதிக்காக பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில் சென்னையின் முக்கியமான இன்பரா, ஐடி பார்க், ஆபீஸ் ஸ்பேஸ் குறித்த அப்டேட்களை தொகுத்துள்ளோம்.
வேளச்சேரி: ஐடி ஊழியர்களும், ஐடி நிறுவனங்களும் நிறைந்த வேளச்சேரி பகுதியில் Tulive Helix என்ற நவீன டிசைனில் உருவான கட்டிடம் தற்போது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சுமார் 12 தளம் கொண்ட இந்த கட்டிடம் வித்தியாசமான வடிவமைப்பில் கட்டப்பட்டு உள்ளதால் Tulive Helix வேளச்சேரி-யின் புதிய அடையாளமாக மாறியுள்ளது.

12 தளம் கொண்ட இந்த கட்டிடத்தில் 2 தளத்தை டாடா குழுமத்தின் ரீடைல் பிராண்டான வெஸ்ட்சைட் வாடகைக்கு எடுத்து ரீடைல் விற்பனை கடையைச் செயல்படுத்தி வருகிறது. மீதமுள்ள 10 தளம் 3 லட்சம் சதுரடி அலுவலக தளமாகும். 10 தளம் கொண்டு அலுவலக இடம் WorkEZ என்னும் பிளெக்ஸ் வொர்க்ஸ்பேஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஐஐடி மெட்ராஸ்: இந்தியா ஏரோஸ்பேஸ் துறையில் முன்னோடியாக இருக்கும் வேண்டும் என்ற முக்கிய இலக்கை கொண்டு இருக்கும் வேளையில், இந்தியாவில் பிரைவேட் ஜெட் முதல் ராணுவத்தில் பயன்படுத்தும் பைட்டர் ஜெட் வரையில் உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை கொண்டு பல வெளிநாட்டு நிறுவனங்களையும், முதலீட்டையும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் ஐஐடி மெட்ராஸ் கல்லூரி, பிரான்ஸ் நாட்டின் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் நிறுவனமான ஸ்ராட்பஸ் ஆசில்லரேட்டார் உடன் இணைந்து ஸ்டார்ட்அப்-களுக்கான இன்னேவேஷன் ஹப் சுமார் 100 மில்லியன் யூரோ நிதியுதவி உடன் அமைக்க உள்ளது.
சென்னை டோல் கட்டணம்: சென்னை மாநகரின் புறநகரில் உள்ள நான்கு டோல் பிளாசாக்களில் ஒரு பயணத்திற்கு 5 முதல் 20 வரை பயனர் கட்டணத்தை அதிகரிக்க NHAI திட்டமிட்டுள்ளதால், இந்த மாத இறுதியில் இருந்து சாலை வழியாகச் சென்னைக்குச் செல்வது அல்லது சென்னையில் இருந்து வெளியே வருவதற்கான கட்டணம் அதிகரிக்க உள்ளது.

சென்னை வோல்டாஸ்: வோல்டாஸ் நிறுவனத்தின் புதிய ஏசி உற்பத்தி ஆலை சென்னைக்கு அருகில் உள்ள சூரப்பூண்டி சிப்காட்டில் உருவாகிறது. சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் இது உருவாகிறது.

சென்னை சிறுசேரி சிப்காட்: சிப்காட் நிறுவனம் சிறுசேரி ஏரியை மறுசீரமைப்பு செய்து வருகிறது. இந்த மறுசீரமைப்பு பணியில் சிறுசேரி ஏரியை சுற்றி சைக்கிள் & ஜாகிங் டிராக்குகள் அமைக்கப்படும். மேலும் இது சிறுசேரி IT பூங்காவிற்கு பின்னால் 30 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.


Click it and Unblock the Notifications