இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு, 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களின் வளர்ச்சி என 360 கோணத்திலும் புதிய வேகத்தை கொடுத்த ஸ்டார்ட்அப் துறை 2023 ஆம் ஆண்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் தவித்து வருவதோடு பல நிறுவனங்கள் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்தும் வருகிறது.
இந்த நிலையில் ஜூலை மாதத்தின் வென்சர் கேப்பிடல் முதலீடுகள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளது, 2023 ஆம் ஆண்டின் முதல் 7 மாதத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஜூலை மாதம் வென்சர் கேப்பிடல் முதலீடுகளின் அளவு மிகவும் குறைவான அளவீட்டை பதிவு செய்துள்ளது.

ஜூலை மாதம் மொத்தமாகவே 529 மில்லியன் டாலர் தொகையை மட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளது, மேலும் 1 பில்லியன் டாலர் என்ற பென்ச்மார்க் அளவுக்கு கீழ் 3வது மாதமாக வென்சர் கேப்பிடல் முதலீடுகள் 2023 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு அதிகப்படியாக மார்ச் மாதம் 1.4 பில்லியன் டாலர் முதலீடுகள் குவிந்துள்ளது.
ஜூலை மாதம் குவிந்த மொத்த 529 மில்லியன் டாலர் முதலீட்டில் சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே 191 மில்லியன் டாலர் முதலீடுகளை பெற்று அதிகம் முதலீடு பெற்ற நகரமாக விளங்குகிறது. சென்னையை தொடர்ந்து டெல்லி, பெங்களூர் டாப் 3 இடங்களை பிடித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் மிகவும் மோசமான முதலீட்டு காலமாக இருக்கும் இந்த ஜூலை மாதத்தில் சென்னை அதிகப்படியான முதலீட்டை ஈர்த்துள்ளது சிறப்பான விஷயம். ஜூலை மாதத்தில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்த துறையாக பின்டெக், எலக்ட்ரிக் வாகனம், ஐடி சேவை துறை நிறுவனங்கள் இப்பட்டியலில் உள்ளது.
ஜூலை மாதத்தில் அதிகப்படியான முதலீட்டை பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் Kaar Technologies, Battery Smart, Renewbuy மற்றும் Veritas Finance ஆகியவை திகழ்கிறது. இந்த 4 நிறுவனங்கள் மட்டுமே 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை பெற்றுள்ளது, மற்ற முதலீடுகள் அனைத்தும் 50 மில்லியன் டாலருக்கு கீழ்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications