சினிமா வெறும் பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கப்பட்டாலும் இது பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் ஒரு மெகா தொழிற்துறை. கலையும், அறிவியலும் பின்னி பிணைந்து இன்று சினிமா தயாரிப்பு புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வரும் வேளையில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சென்னையில் நேற்று நடந்து முடிந்த கலைஞர் 100 விழாவில் பேசிய முதல்வர் முக. ஸ்டாலின், சென்னை பூந்தமல்லி பகுதியில் சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் 540 கோடி ரூபாய் முதலீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்புச் சினிமா துறையினருக்கு மட்டும் அல்லாமல் அதைச் சார்ந்துள்ள மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் சினிமா தயாரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் வெறும் கலை, நடிப்பு என்பதைத் தாண்டி தொழில்நுட்ப அளவில் பல வகையில் மாறிள்ளயுள்ளது.
இதை ஈடுசெய்யவே நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்த நவீன திரைப்பட நகரில் இன்றைய காலச் சினிமாவுக்குத் தேவையான VFX, அனிமேஷன், புரொடக்சன் பணிகள் செய்வதற்கான கட்டமைப்புகள், 5 ஸ்டார் ஓட்டல் ஆகியவை அமைக்கப்படும் எனத் தெரிகிறது.
இது ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டி-க்கு இணையான அளவில் இல்லை என்றாலும் தொழில்நுட்ப ரீதியில் கட்டாயம் மாஸ் காட்டும் என நம்பப்படுகிறது.
ராமோஜி பிலிம் சிட்டி என்பது ஹைதராபாத்தில் உள்ள அப்துல்லாபூர்மெட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஒருங்கிணைந்த பிலிம் ஸ்டுடியோ தளமாகு. இந்தப் பிலிம் சிட்டி சுமார் 1,666 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இதுதான் உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ தளமாகும்.
முதலில் தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமே ராமோஜி பிலிம் சிட்டியில் அதிகம் தயாரிக்கப்பட்ட நிலையில், கடந்த 5-8 வருடத்தில் பிற மொழி படங்கள் அதிகளவில் இங்குப் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாக 5 கோடி ரூபாய் செலவில் 4 படப்பிடிப்புத் தளத்தை எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் முதல்வர்.
இவ்விரு திட்டங்கள் மூலம் தமிழ் சினிமா துறையினர் ராமோஜி பிலிம் சிட்டி மற்றும் பிற தொழில்நுட்ப தேவைக்காகப் பிற மாநிலங்களுக்குச் செல்வது குறையும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications