சென்னை: சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் வேலைக்கு செல்வதற்கும் ,கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்வதற்கும் பெருமளவில் புறநகர் ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர் , அந்த வகையில் சென்னையின் பிரதான போக்குவரத்து சேவையாக புறநகர் ரயில்கள் இருக்கின்றன.
நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர், குறிப்பாக பீக் அவர்களில் இந்த புறநகர் ரயில்களில் ஏரி இறங்குவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இந்த நிலையில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே புறநகர் ரயில் சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.

இதன்படி சென்னையில் இயக்கப்படும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு , சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் இது நாள் வரை 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன, அதனை 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக தரம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 4 லட்சம் பேர் இந்த ரயில்களில் பயணம் செய்ய முடியும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும் என தெற்கு ரயில்வே கூறி இருக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னையில் புறநகர் ரயில்களில் ஒரு நாளைக்கு 8.6 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர், அதே வேலையில் நகர்ப்புறத்திற்குள்ளேயே பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 3.4 லட்சம் ஆக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறது.
காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் ரயில் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த சூழலில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 9இல் இருந்து 12ஆக உயர்த்துகிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக 4 லட்சம் பேர் தினம்தோறும் இந்த ரயில்களல் சவுகரியமாக பயணம் செய்ய முடியும் என கூறி இருக்கிறது.
இந்த ரயில்களில் தற்போது இருக்கைகளின் எண்ணிக்கையும் 21 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.கூட்ட நெரிசலை குறைக்க வேண்டும், பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் புறநகர் ரயில்களை பயன்படுத்தக்கூடிய தென்மேற்கு மற்றும் வடகிழக்கு வழித்தடங்களில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications