ஆப்பிள் நிறுவனம் உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடத்தில் இருக்க முக்கியமான காரணம் தமிழ்நாடு என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் இதுதான் உண்மை. எந்தொரு ஒரு தயாரிப்பாக இருந்தாலும் சரியான விலையில், தரமாக தயாரித்து, சந்தையின் டிமாண்ட்-க்கு ஏற்ப சப்ளை செய்யும் போது தான் அதன் வெற்றி இருக்கும். அந்த வகையில் ஆப்பிள்-ன் ஐபோன் விற்பனைக்கு சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை தான் காரணமாக உள்ளது.
பாக்ஸ்கான் சென்னை தொழிற்சாலையில் செய்த மேஜிக் ஆப்பிள்-க்கு மிகவும் பிடித்துப்போக, அமெரிக்கா ஆப்பிள் நிர்வாகம் அடுத்த முக்கிய பொருளையும் சென்னையில் தயாரிக்க உத்தரவிட்டு உள்ளதாகத் தெரிகிறது. அப்படி என்ன பொருள், வாங்கப் பார்ப்போம்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை-க்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இதுநாள் வரையில் ஐபோன் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதே தொழிற்சாலையில் ஐபேட்களைத் தயாரிக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை, ஃபாக்ஸ்கான் மற்றும் ஆப்பிளின் பிற உலகளாவிய ஒப்பந்த உற்பத்தியாளர்கள் இந்திய தொழிற்சாலையில் ஆப்பிளின் ஸ்மார்ட்போன்களை மட்டுமே தயாரித்து வருகிறது. முதல் முறையாக பலகட்ட ஆய்வுகள், சோதனைகளுக்குப் பிறகு ஐபேட் தயாரிக்கும் முயற்சியில் ஆப்பிள் இறங்கியுள்ளது. இதில் முக்கியமாக ஆப்பிள் ஸ்ட்ரிக்ட் ஆர்டரை தொடர்ந்து முதல் நிறுவனமாக ஃபாக்ஸ்கான் தனது சென்னை தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபேட்களைத் தயாரிக்கத் தொடங்குவதில் தீவிரமாக பணியாற்றத் துவங்கியுள்ளது.
இது குறித்து வெளியான தரவுகள்படி, பாக்ஸ்கான் தரப்பில் ஐபேட் தயாரிக்கத் தமிழ்நாடு அரசுடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்துள்ளது, தற்போதைய திட்டத்தின் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளில் தற்போதுள்ள உற்பத்தித் திறன் இரண்டு மடங்கு உயர்த்த பாக்ஸ்கான் இலக்கு வைத்துள்ளது. இந்த உற்பத்தி அளவில் ஆப்பிள் ஐபோன், ஐபேட் உட்பட இன்னும் சில தயாரிப்புகளும் அடங்கும் என்று தெரிகிறது.
பாக்ஸ்கான் தனது உற்பத்தியை அதிகரிக்கவும், அதிகப்படியான ஊழியர்களைத் தொழிற்சாலை வளாகத்திற்குள் வைக்கவும் மிகப்பெரிய அளவில் ஹாஸ்டல் கட்டிடங்களைக் கட்டி வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் அதிகப்படியான ஊழியர்கள் பணியில் அமர்த்த வாய்ப்புகள் உள்ளது.
சென்னையில் பாக்ஸ்கான் மற்றும் இதர ஒப்பந்த உற்பத்தியாளர்கள் என்னதான் ஐபோன், ஐபேட்-களை உயர்தரத்தில் தயாரித்தாலும் மேக் லேப்டாப்-ஐ தயாரிக்கும் இன்னும் சில ஆண்டுகள் தேவை. மேலும் மேக் லேப்டாப்-க்கான உற்பத்தி அளவு மிகக் குறைவு என்பதால் சென்னையில் மேக் லேப்டாப் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஆப்பிள் தனது உற்பத்தியைச் சீனாவிலிருந்து விலக்கிய போது கடந்த ஆண்டு ஐபேட் தயாரிப்பின் ஒரு பகுதியை வியட்நாம் நாட்டிற்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது. ஆயினும், தற்போது சென்னையில் ஐபேட் தயாரிக்க ஆப்பிள் பாக்ஸ்கான்-க்கு உத்தரவிட்டுள்ளது மிகவும் முக்கியமானது.
இதேவேளையில் ஜூன் 28ஆம் தேதி, பாக்ஸ்கான் தனது ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் செயற்கை நுண்ணறிவு மாடல்களை டிரைனிங் செய்து இயங்கும் இயக்கும் உயர் செயல்திறன் மிக்க கம்ப்யூட்டர்களை கொண்டு செயல்படும் ஏஐ சர்வர்களை உற்பத்தி செய்யத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications