இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலை அமைத்தும், அலுவலகத்தை திறந்து வரும் வேளையில் தற்போது தைவான் நாட்டின் ASUS சென்னைக்கு வந்துள்ளது.
உலகின் முன்னணி மற்றும் பிரபலமான லேப்டாப் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ASUS தற்போது 80 சதவீத உற்பத்தியை சீனாவில் இருந்தும், மீதமுள்ள உற்பத்தியை தைவான், பிரேசில், ஐரோப்பா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவை தனது 2வது அல்லது 3வது பெரிய உற்பத்தி தளமாகமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை கொண்டு உள்ளது.

மத்திய அரசின் மேக்-இன்-இந்தியா திட்டம் மற்றும் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த லேப்டாப் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள், இதற்காக தனி உரிமம் பெற வேண்டும் என்ற முக்கிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதேவேளையில் இந்தியாவில் உற்பத்தியை துவங்க வெளிநாட்டி நிறுவனங்களுக்கு IT வன்பொருளுக்கான புதுப்பிக்கப்பட்ட ரூ. 17,000 கோடி மானியம் கொண்ட உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டமும் உள்ளது.
இந்த நிலையில் தான் தைவான் நாட்டின் லேப்டாப் நிறுவனமான ஆசஸ், சீனாவில் உள்ள அதன் பெரும் பகுதி உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையில் இயங்கி வரும் ஒப்பந்த உற்பத்தியாளரான FLEX உடன் இணைந்து புதிய தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.
சுமார் $15 பில்லியன் சந்தை மதிப்புடன் இருக்கும் ASUS நிறுவனம் மத்திய அரசின் PLI திட்டத்தை நம்பி இந்தியாவில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. ஆசஸ் நிறுவனம் சென்னையில் flex உடன் இணைந்து உருவாக்கும் தொழிற்சாலை மூலம் இந்திய தேவையை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தைகளின் தேவையையும் பூர்த்து செய்ய திட்டமிட்டு உள்ளது

மத்திய அரசு எப்படி இந்தியாவில் லேப்டாப், டேப்லெட், ஆல் இன் ஒன் கம்பியூட்டர்களின் இறக்குமதியை குறைக்க திட்டமிட்டு இறக்குமதி கட்டுப்பாடு, உரிமம் பெற வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்ததோ, அதேபோல் மோடி தலைமையிலான மத்திய அரசு டெலிகாம் கருவிகள், உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காவும், இந்தியாவில் அதன் உற்பத்தியை துவங்க வேண்டும் என்பதற்காகவும் பகுதி பகுதியாக வரியை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய டெலிகாம் துறை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் டெலிகாம் கருவிகளுக்கு 10 சதவீத இறக்குமதி வரியும், அக்டோபர் மாதம் முதல் 15 சதவீத வரியும் பேக் செய்யப்பட்ட டெலிகாம் பொருட்களுக்கு விதிக்கும் திட்டத்தை ஆய்வு செய்ய துவங்கியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் டெலிகாம் கருவிகள் அனைத்தும் காஸ்ட்லியாகிவிடும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications