சென்னை அருகே தாம்பரத்தில் செயல்படும் ஏற்றுமதி செயலாக்க மண்டலமான மெப்ஸை பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டு மையமாக மாற்ற 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மேம்பாட்டு ஆணையராக செயல்பட்டு வரக்கூடிய ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன், மெப்ஸ் தாம்பரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் 500 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று பிஸினஸ் லைனுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக இரண்டு ஆண்டுகளில் சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தற்போது இருக்கும் நிலத்தடி குழாய் அமைப்பினை முற்றிலுமாக சீரமைப்பது மற்றும் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ,குடிநீர், கழிவுநீர் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான குழாயில் தனித்தனி வழிகளில் செல்லும்படி மாற்றம் செய்யப்படுகிறது எனக் கூறினார்.
இதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும் என்றும் அலெக்ஸ் பால் மேனன் பிசினஸ் லைனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மார்ச் மாத இறுதிக்குள் வளாகம் முழுவதும் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் வாகன நிறுத்த விதிகளை மதிக்காதவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அனைத்து மேற்கூரைகளிலும் சோலார் பேனல்களை பொருத்தும் திட்டமிருப்பதாக தெரிவித்துள்ள அலெக்ஸ் பால் மேனன் , இதன் மூலம் 20 முதல் 24 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்து மெப்ஸ் வளாகத்திற்குள் பயன்படுத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் தாம்பரம் மெப்ஸ் வளாகம் பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டு வளாகமாக மாறும் என அவர் உறுதியளித்துள்ளார்.
மெப்ஸ் வளாகத்திற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துவது, சுத்தமான குடிநீரை வழங்குவது மற்றும் பசுமை நிறைந்த வளாகமாக மாற்றுவது தங்களின் இலக்கு எனக் கூறியுள்ளார். பழைய கட்டிடங்களில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் இந்த வளாகத்தின் பசுமையை பாதுகாக்கும் வகையிலும் இருப்பது உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மெப்ஸில் காக்னிசன்ட் ,ஹெச்டிசி குளோபல், இ-கான் சிஸ்டம், கோத்ரேஜ் என பல்வேறு முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மெப்ஸ் வளாகத்தில் மென்பொருட்கள், துணிமணிகள் ,கேமராக்கள், ரசாயனங்கள் ,லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்தம் 106 நிறுவனங்களின் அலுவலகங்களும் உற்பத்தி மையங்களும் மெப்ஸில் இயங்கி வருகின்றன.
2024 -25ஆம் நிதியாண்டின் முதல் 9 மாத காலத்தில் தாம்பரம் மெப்ஸில் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் 3529 கோடி ரூபாயாக இருக்கிறது கிட்டத்தட்ட 35, 363 பேர் இங்கே பணிபுரிகின்றனர். வெளிநாட்டு கரன்சி வருவாயில் தாம்பரம் மெப்ஸ் 3,278 கோடி ரூபாயை பங்களிப்பாக செய்திருக்கிறது என அலெக்ஸ் பால் மேனன் கூறியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் இங்கே 3557 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications