சென்னை புதிய முயற்சிகளுக்கு எப்போதும் கைகொடுக்கும் ஒரு நகரம், கடந்த சில வருடத்தில் சென்னையில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு முக்கிய வர்த்தகம் மார்டன் டீ கடைகள் தான். தமிழ்நாட்டு மக்களுக்கு டீ குடிப்பது என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் வேளையில் டீ கடைகளில் புதுமை ஏற்படுத்திய பல பிராண்டுகள் பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
இப்படி சென்னை மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் பல இடங்களில் பிரபலமாக இருக்கும் Tea Boy நிறுவனத்தின் தலைவர், தனது நிறுவனத்தில் 3 முக்கிய அதிகாரிகளுக்கு புதிய ஹூண்டாய் ஐ10 கார்களை பரிசாக கொடுத்துள்ளார். Tea Boy நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாங்காற்றிய நிலையில், அவர்களுடைய நேர்மைக்கு பரிசாக இந்த கார் அளிக்கப்பட்டு உள்ளது.

2019ல் ஜோசப் ராஜேஷ் Tea Boy நிறுவனம் துவங்கிய நாளில் இருந்து 3 ஆண்டுகளில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், இதற்கு முக்கிய காரணமாக தமிழ்செல்வி, பிரசாந்த், மணிமாறன் ஆகியோர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தூண் போல செயல்படும் நிலையில் இவர்களுக்கு புதிய ஹூண்டாய் ஐ10 கார்கள் பரிசாக கொடுக்கப்பட்டு உள்ளதாக ஜோசப் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்செல்வி, பிரசாந்த், மணிமாறன் ஆகியோருக்கு இந்த காரை சென்னையின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் kissflow நிறுவனத்தின் சிஇஓ சுரேஷ் சம்பந்தம் கொடுத்தார். ஜோசப் ராஜேஷ் 2019ல் உருவாக்கிய Tea Boy நிறுவனம் தற்போது 410 கிளைகள் உடன் இயங்கி வருகிறது.
ஏப்ரல் மாதம் kissflow நிறுவனத்தின் சிஇஓ சுரேஷ் சம்பந்தம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் முக்கிய ஊழியர்களுக்கு BMW கார்களை பரிசாக கொடுத்தார். ஒவ்வொரு காரும் 1 கோடி ரூபாய் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சென்னையில் பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு விலைமதிக்கத்தக்க பரிசுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications