இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் மாநிலமாக உருவெடுத்திருக்கும் தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையில் பல முக்கிய முதலீடுகள், வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்புகள் குறித்த அப்டேட் வந்துள்ளது.
முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, கோவை என ஒரு சில நகரங்களையும், மாவட்டங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் இருந்து மாறி மாநிலம் முழுவதும் புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியள்ளது. இந்த பயணத்தில் மிகவும் முக்கியமான முதலீட்டு அப்டேட்டை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
தூத்துக்குடி EV: வின்பாஸ்ட் என்ற வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம், தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் 1,50,000 வாகன உற்பத்தி திறன் கொண்ட எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அடுத்த ஆண்டு திறக்க தயாராகி வரும் வேளையில், தூத்துக்குடி தொழிற்சாலை கட்டுமானம் புதிய வேகத்தை எடுத்துள்ளது செயற்கைகோள் புகைப்படத்தின் மூலம் தெரிகிறது.

200 கோடி ரூபாய் முதலீடு: சீனாவின் குவாங்க்டா குழுமத்தின் துணை நிறுவனமான ஏஇடி டிஸ்ப்ளேஸ், சென்னையில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு டிஸ்ப்ளே தொழிற்சாலை மற்றும் கிடங்கை அமைக்க உள்ளது. இந்த முதலீடு சென்னையின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிஸ்பிளே தொழில்நுட்பங்களுக்கான முக்கிய உற்பத்தி மையமாக வலுப்படுத்தும்.
AC நிறுவனம்: டாடா வோல்டாஸ், குமிடிப்பூண்டியில் உள்ள மன்னாலூர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டரில் புதிய ஏசி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த 500 கோடி ரூபாய் முதலீட்டு திட்டம், முதல் கட்டத்தில் 1,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைப்பர்லூப் சோதனை: தமிழ்நாடு, உயர் தொழில்நுட்பங்களில் முன்னேறியுள்ளது. IIT-மெட்ராஸில் நாட்டின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே, IIT-மெட்ராஸின் அவிஷ்கார் ஹைப்பர்லூப் குழு மற்றும் TuTr ஆகியவற்றின் இணைந்து இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவின் உயர் வேக போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய முன்னேற்றத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
திருநெல்வேலி அப்டேட்: சோலார் எனர்ஜி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் விக்ரம் சோலார், திருநெல்வேலியில் தனது புதிய சோலார் செல் மற்றும் PV தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. 3,007 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையானது 4,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை நிறைவேற்றுவதில் பங்களிக்கும்.

சென்னை ரியல் எஸ்டேட்: எல்&டி ரியால்டி, வட சென்னையில் செம்பியம் மெட்ரோ நிலையத்தின் அருகே 8.63 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இது பெரிய அளவிலான குடியிருப்பு திட்டம் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளது. இது சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தையை முக்கிய திட்டமாக மாறக்கூடும்.

ஆட்டோமொபைல்: உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான், சென்னையில் தனது தேசிய பயிற்சி மையமான 'நிசான் அகாடமி'யை தொடங்கியுள்ளது. இந்த நவீன வசதிகளைக் கொண்ட மையம், ஆண்டுக்கு 1,000 பேருக்கு நவீன வாகன பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications