அனைத்து அரசு சேவைகளும் நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்தி வருகிறது. ஜூலை 15ஆம் தேதி தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வரும் நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பெண்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது . அது மட்டும் இன்றி பட்டா , சிட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்வது, வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்வது , ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றுக்கு விண்ணப்பம் செய்வது, ஆதார் அட்டையில் மாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் கேட்டு விண்ணப்பம் செய்வது, உள்ளிட்ட பெரும்பாலான அனைத்து சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாகவே வழங்கப்பட்டு வந்தன.

அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு அரசு தேவைகளைப் பெற்று பலன் அடைந்தனர். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை வேண்டி லட்சக்கணக்கான பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்தனர். தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது நவம்பர் 14ஆம் தேதியுடன் இந்த முகாம்கள் முழுமையாக நிறைவடையுள்ளன .
இந்த நிலையில் 18 மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நிறைவடைந்து இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. தற்போது முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட 18 மாவட்டங்களிலும் இனி முகாம்கள் நடைபெறாது . இந்த மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்யவும் முடியாது .

சென்னை, அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, நாமக்கல், பெரம்பலூர் ,புதுக்கோட்டை ,ராமநாதபுரம் , ராணிப்பேட்டை சிவகங்கை , தேனி, தூத்துக்குடி, திருப்பத்தூர் ,வேலூர் ஆகிய மாவட்டங்களில் இனி உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறாது. அந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து முகாம்களும் நடந்து முடிந்துவிட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி வரை முகாம்கள் நடைபெறுகின்றன. மக்கள் தங்கள் பகுதியில் எங்கே முகாம்கள் நடக்கின்றன என்பதை https://ungaludanstalin.tn.gov.in/camp.php என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமைத் தொகையை கூறி இனி விண்ணப்பம் செய்ய முடியாது. மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் இன்னும் இரண்டு வாரமே இருப்பதால் அதனை பயன்படுத்தி உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பெறப்பட்ட மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் ஆய்வு பணி முடிந்து தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications