இந்தியாவின் சிலிக்கான் வேலி என பெங்களூரு நகரை அழைக்கிறோம் . கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்களும் நிறைந்து இருக்கின்றன. பல்வேறு ஸ்டார்ட் நிறுவனங்களும் பெங்களூருவில் தான் தங்களுடைய அலுவலகங்களை திறந்து இருக்கின்றன .இதனால்தான் பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கிறோம்.
இருந்தாலும் பெங்களூரு நகரத்திற்கு உள்கட்டமைப்பு பிரச்சனை, டிராபிக் பிரச்சனை உள்ளிட பல்வேறு பிரச்சனைகள் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் பெங்களூருவை விட்டு வெளியேறு வெளியேறி விடலாமா என்ற யோசனைக்கு சென்று இருக்கின்றன. இத்தகைய சூழலில் தான் பெங்களூருக்கு மாற்றாக ஐடி மற்றும் ஜிசிசி மையங்களுக்கான ஒரு நகரமாக சென்னை படிப்படியாக உருவாகி வருகிறது.

சென்னையை பொருத்தவரை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 33 ஐடி பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. சென்னையில் எல்&டி நிறுவனம் தன்னுடைய இன்னோவேஷன் கேம்பஸை 5.3 மில்லியன் சதுர அடி பரப்பில் அமைக்கிறது. அதே போல ஓஎம்ஆர்-இல் சாத்வா நாலேஜ் சிட்டி , டிஎல்எப் டவுன், பாக் மானே துரைப்பாக்கம், ஒலிம்பியா போரூர் என பல்வேறு நிறுவனங்களும் சென்னையில் போட்டி போட்டுக்கொண்டு ஐடி பூங்காக்களை அமைக்க இருக்கின்றன .
ஜிசிசி மையங்கள் அதிக அளவில் சென்னை நோக்கி படையெடுப்பதும் ஐடி நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகங்களை விரிவாக்கம் செய்வதும் இந்த அலுவலக கட்டுமான பணிகளோடு ஒத்துப் போகிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டுகளில் சென்னையில் ஐடி அலுவலகங்களின் பரப்பளவு பல மடங்கு உயர இருக்கிறது . இது சென்னையின் ஒரு பகுதி மட்டுமில்லாமல் அம்பத்தூரில் தொடங்கி ஓஎம்ஆர் , துரைப்பாக்கம் வரை அனைத்து பகுதிகளிலும் அமைவது தான் மற்றொரு சிறப்பு.

ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் சிறுசேரியில் தன்னுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. கேப்ஜெமினி நிறுவனம் சிறுசேரி அலுவலகத்தை விரிவாக்கம் செய்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சென்னையில் 45 லிருந்து 55 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடங்கள் உருவாக இருக்கின்றன. தனியார் நிறுவனங்கள் தொடங்கி அரசு நிறுவனங்கள் வரை போட்டி போட்டுக் கொண்டு அலுவலக இடங்களை உருவாக்குகின்றன.
பெங்களூருடன் ஒப்பிடும்போது சென்னையில் அலுவலக ரியல் எஸ்டேட் விலைகள் என்பது குறைவாக இருக்கிறது. எனவே பெங்களூரை விட சென்னையில் அலுவலக இடம் அமைப்பது நிறுவனங்களுக்கு விலை குறைவானது தற்போது திறன் மிகு ஊழியர்களுக்கும் இங்கே பஞ்சம் இல்லை. தமிழ்நாடு அரசும் ஐடி, டேட்டா மையங்கள், ஜிசிசி மையங்கள் ஆகியவற்றை கொண்டு வரும் இலக்கோடு பல்வேறு கொள்கைகளை வகுத்து நிறுவனங்களுக்கு சலுகைகளையும் வழங்குகிறது.
இருந்தாலும் பெங்களூருக்கு நிகரான வளர்ச்சியை சென்னை அடைய வேண்டும் என்றால் மேலும் சில போக்குவரத்து ரீதியிலான உள்கட்டமைப்புகள் ,பெங்களூரு போல night life உள்ளிட்டவற்றை உருவாக்கினால் சிலிக்கான் வேலியாக உருவாகும் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications