சென்னை: கேரள மாநிலம் கொச்சினில் நீர்வழி மெட்ரோ திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதைப் போன்ற ஒரு நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை சென்னையில் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கொச்சின் நீர்வழி மெட்ரோ: கேரளா மாநிலம் கொச்சினில் வாட்டர் மெட்ரோ என்ற பெயரில் படகு போக்குவரத்து திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொச்சினில் இருக்கும் பகுதிகளில் நீர்வழி போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் தான் வாட்டர் மெட்ரோ திட்டம். கொச்சின் மெட்ரோ நிர்வாகமே இந்த திட்டத்தையும் செயல்படுத்துகிறது. 38 டெர்மினல்கள், 16 வழிதடங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் படகுகள் என 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த கொச்சின் வாட்டர் மெட்ரோ இணைப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையிலும் திட்டம்: கொச்சினில் நாள்தோறும் 30000 பேர் இந்த நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை பயன்படுத்துகின்றனர். இதே போன்ற ஒரு திட்டத்தை சென்னையிலும் கொண்டு வர CUMTA அமைப்பான சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது. கொச்சின் வாட்டர் மெட்ரோ சிஸ்டத்தை மாடலாக கொண்டு சென்னையில் ஈசிஆர் முதல் நேப்பியர் பாலம் வரை நீர்வழிப் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஈசிஆர் முதல் நேப்பியர் பாலம் வரை :இது தொடர்பாக CUMTA சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில் சென்னையின் ஈசிஆர் தொடங்கி நேப்பியர் பாலம் வரை நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை கொண்டு வருவதற்கு பரிந்துரை செய்திருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். கொச்சினில் ஏற்கனவே இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்கள் சென்னையிலும் இந்த திட்டத்தை கொண்டு வர ஆய்வு நடத்தி வருகிறோம் என தெரிவித்திருக்கிறார்.

என்னென்ன சவால்கள்: ஏற்கனவே சென்னையில் அடையாறு , கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றை இணைத்து படகு போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் ஆய்வுப் பணிகளுடனே முடிந்துவிட்டன. கரையோரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகள், குறுகிய கால்வாய்கள், மாசு ஆகியவை இதற்கு பெரிய சவாலாக இருக்கின்றன. இருந்தாலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல், வாகன புகையால் ஏற்படும் மாசு ஆகியவற்றை குறைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விரிவான ஆய்வறிக்கை: இந்நிலையில் தான் மத்திய அரசின் தேசிய நீர்வழிப் போக்குவரத்து திட்டம் 4 இன் கீழ் சென்னையில் படகு போக்குவரத்து திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதற்கான விரிவான திட்ட ஆய்வு அறிக்கை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகு போக்குவரத்தை கொண்டு வருவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ,இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து விட முடியுமா ,மின்சாரத்தில் இயங்கக்கூடிய படகுகளை பயன்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களோடு இணைக்க கூடிய வகையில் படகு நிலையங்களையும் அமைக்க வேண்டி இருக்கிறது,அதற்கு முன்பாக இந்த நதிகளை சீரமைப்பது பெரிய சவாலாக இருக்கும். இதனை கடந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால் சென்னைவாசிகள் படகில் பயணம் செய்யலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications