சென்னை: பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களுடைய ஜிசிசி எனப்படும் Global Capability Centres (GCC) மையங்களை இந்தியாவில் நிறுவ ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் ஜிசிசி மையங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சென்னையில் கணிசமாக அதிகரித்துள்ளது.
வழக்கமாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய ஜிசிசி மையங்களை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தான் அமைக்கும். ஆனால் அண்மை காலமாக அவை சென்னை நோக்கி திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது.

மணி கண்ட்ரோல் தளம் நாஸ்காம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூருவில் இருந்த ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை 600 தான், அதுவே தற்போது 258 மையங்கள் கூடுதலாக சேர்ந்து 800ஐ கடந்துள்ளது. அடுத்ததாக ஹைதராபாத் நகரில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் 124 ஜிசிசி மையங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. அதற்கு இணையாக சென்னையில் 124 ஜிசிசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இந்தியாவிலேயே சென்னையில் தான் ஜிசிசி மையங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் பெங்களூருவில் ஜிசிசி மையங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 68,760 என உயர்ந்துள்ளது அதுவே ஹைதராபாத்தில் 75 ,895 என உள்ளது. சென்னைய பொறுத்தவரை நாட்டிலேயே அதிகபட்சமாக 94,121 என ஜிசிசி மையங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மிகப் பெரிய நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் சென்னையில் அமைந்திருப்பது தான் என்கிறார் இந்த துறையை சேர்ந்த ராம்குமார் ராமமூர்த்தி.
சென்னையில் இயங்கக்கூடிய பல்வேறு ஜிசிசி மையங்களிலும் 2000 முதல் 20,000 வரையிலான ஊழியர்கள் பணி செய்கின்றனர். அது மட்டும் இன்றி சென்னையில் அறிவியல் ,தொழில்நுட்பம் , பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் அதிகம். அதே போல இந்த துறைகளில் படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதாலேயே சென்னையில் ஜிசிசி மையங்கள் அதிகளவிலான ஆட்களை வேலையில் அமர்த்துகின்றன எனக் கூறுகிறார்.
குறிப்பாக வாகன உற்பத்தி துறையில் செயல்படக்கூடிய ஜிசிசி மையங்கள் தங்களுடைய அலுவலகங்களை சென்னையில் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. சர்வதேச அளவிலான முதல் பத்து நிதி நிறுவனங்கள், டெலிகம்யூனிகேஷன் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், உற்பத்தி துறை மற்றும் வாகன உற்பத்தி துறையை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் அமைத்துள்ளன. முன்னதாக பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு அரசு பன்னாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்களை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அறிவித்தார். குறிப்பாக நிதி உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
சென்னைக்கு அடுத்தபடியாக ஜிசிசி மையங்கள் அதிகரித்து வரும் நகரமாக புனே இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொருத்தவரை புனே மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களிலும் ஜிசிசி மையங்களில் பணியாற்று ஊழியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் ஜிசிசி மையங்களை அமைப்பதற்கு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
Written by: Devika
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications