சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் அதேவேளையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை வேளச்சேரி அருகே இருக்க கூடிய காமாட்சி மருத்துவமனை ஜங்ஷனில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யூ டர்ன் வசதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான சுரேஷ் சந்திர மேனன் அளித்த பரிந்துரையின் பேரில் காவல்துறையினர் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இரண்டு இடங்களில் யூ டர்ன் வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இனி இங்கே வாகன ஓட்டிகளுக்கு சிக்னல்கள் இயங்காது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வேளச்சேரியில் இருந்து பல்லாவரம் செல்லக்கூடிய வாகனங்கள் காமாட்சி மருத்துவமனை ஜங்ஷன் பகுதியில் இடது புறமாக திரும்பி 200 மீட்டர்கள் சென்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூ டர்ன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்பு வாகன ஓட்டிகள் இந்த இடத்தில் சிக்னலுக்காக 10 நிமிடங்கள் வரை காத்திருந்து தான் இந்த சாலையில் திரும்ப முடியும் . ஆனால் தற்போது யூ டர்ன் வசதி கொண்டுவரப்பட்டிருப்பதால் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்கள் யூ டர்ன் செய்யும் வகையில் சில மாற்றங்களை கொண்டு வந்து அதை சாத்தியமாக்கியுள்ளனர். கனரக வாகனங்கள் கூட திரும்பும் வகையில் இந்த சாலையில் வசதி செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பல்லாவரத்தில் இருந்து பள்ளிக்கரணை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் காமாட்சி மருத்துவமனை சிக்னல் அருகே வலது புறமாக திரும்ப வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் இடதுபுறமாக திரும்பி யூ டர்ன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பாலாஜி பல் மருத்துவமனை கல்லூரி அருகில் இருக்கக்கூடிய மேம்பாலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யூ டர்ன் வசதிகளால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் இரண்டு புறமும் வாகனங்கள் சீராக செல்ல முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சாலையில் யூ டர்ன் ஏற்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கியதே நடிகரும் இயக்குநருமான சுரேஷ் சந்திர மேனன் தான். தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் எப்பொழுதும் இந்த சாலையின் இரண்டு புறமும் குறைந்தது 200 வாகனங்களாவது காத்திருக்கும். ஆனால் தற்போது இரண்டு பக்கமும் வாகனங்கள் சீராக செல்கின்றன என கூறியுள்ளார்.
ஏற்கனவே ஓஎம்ஆர் சாலையில் நான் இதே போன்ற ஒரு தீர்வினை வழங்கினேன் அதன் மூலம் ஒவ்வொரு வாகன ஓட்டியும் நாவலூரில் இருந்து மத்திய கைலாசுக்கு செல்வதற்கு பயண நேரத்தில் அரை மணி நேரத்தை சேமிக்கின்றனர் என கூறியிருக்கிறார். இதன் மூலம் கணிசமான அளவு பெட்ரோல் பயன்பாடும் குறைகிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications