போன ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில்களின் வரத்து தாமதம்.. வெளியான டேட்டாவால் பரபரப்பு!

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது, அதன் படி கடந்த சில மாதங்களாக சென்னையில் நீண்ட தூர ரயில்களின் நேரக் கட்டுப்பாடு குறைந்து ரயில்கள் தாமதமாக வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. 2022-2023-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2023-2024-ஆம் ஆண்டில் அதிவிரைவு மற்றும் பயணிகள் ரயில்களின் நேரக் கட்டுப்பாடு குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? ரயில்வே நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

சென்னை டிவிசனில் மற்ற சிறப்பு ரயில்கள் தவிர, தினமும் சுமார் 300 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 170 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பெரும்பாலானவை டாக்டர் MGR சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுகின்றன. இவை ஒன்றாக சுமார் 60 ஜோடி தினசரி ரயில்கள், மற்றும் பல வாராந்திர ரயில்கள், இருவாரங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில்கள் ஆகியவை உள்ளன.

 போன ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில்களின் வரத்து தாமதம்.. வெளியான டேட்டாவால் பரபரப்பு!

இந்நிலையில் சமீப காலமாக பயணிகள் ரயில்களின் வருகை தாமதமாக உள்ளது என்ற பிரச்சனையை சந்தித்து வந்தனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 2022-ஆம் ஆண்டில் 92.67 சதவீதமாக இருந்த மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரக் கட்டுப்பாடு ஜூலை 2023-ஆம் ஆண்டில் 79.58 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் 2022ஆம் ஆண்டில் இருந்த 96.06 சதவீதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2023-ஆம் ஆண்டில் 86.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக சரியான நேரத்திற்கு வரவேண்டிய ரயில்கள் தாமதமாக வந்துள்ளது.

தாமதத்திற்கான காரணங்கள் என்ன?: தெற்கு ரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து பேசுகையில், "ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் உபகரணங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில்களின் வருகை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான ரயில் இயக்கத்திற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

ஜோலார்பேட்டை, குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி போன்ற ரயில் நிலையங்களில் ஏற்கனவே தாமதமாக ரயில்கள் இயக்கப்படுகிறது. கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாகவும் ரயில்கள் தாமதமாக வருகிறது என்று கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டில் ரயில் தாமாதத்தைக் குறைக்க தினசரி அடிப்படையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வந்தே பாரத் ரயில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் மற்ற ரயில்கள் தாமதமாகின்றன என்ற குற்றச்சாட்டையும் மற்றொரு செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

தினசரி கண்காணிப்பு மற்றும் பயணிகளுக்கு முன்கூட்டிய தகவல் தெரிவிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்பாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+