சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), சென்னை-திருச்சி-மதுரை இடைய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.26,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எக்ஸ்பிரஸ்வே தமிழ்நாட்டின் மூன்று முக்கிய நகரங்களை மட்டும் அல்லாமல் 3 முக்கிய தொழில் நகரங்களை இணைக்க உள்ளதால் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை பிராந்திய வளர்ச்சிக்கு முக்கியமான ஊக்குவிப்பாக அமையும், இதேபோல் பயண நேரத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், ஏற்கனவே நடைபெற்று வரும் சென்னை-பெங்களூரு கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே திட்டத்தின் ஒரு நீட்சியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

NHAI, இந்த திட்டத்திற்கான DPR தயாரிப்பை விரைவாக முன்னெடுத்து, விரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ்வே, நவீன உள்கட்டமைப்புகள் உடன், பல வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 8 வழி சாலைகள், அவசர சேவை நிலையங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் பிற சாலை சேவைகளும் அடங்கும்.
இந்த திட்டம் நிறைவேறும் போது, தமிழ்நாட்டில் போக்குவரத்து மற்றும் வணிகம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் திட்டம் சென்னை - திருச்சி வரையில் தான் திட்டமிடப்பட்டது, ஆனால் தற்போது நீக்கப்பட்டு உள்ளது.சென்னை-திருச்சி இடையே 310 கி.மீ நீளமுள்ள எக்ஸ்பிரஸ்வேயை கட்டமைத்து, தற்போது 6 மணி நேரத்தில் பயணிக்கும் தூரத்தை விரைவில் 4 மணி நேரத்தில் கடக்க முடியும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாகு மதுரை வரையில் 8 வழிச் சாலையாக நீக்கப்பட உள்ளது. சென்னை- மதுரை நெடுஞ்சாலை, மாநிலத்தின் முதல் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வேயான சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ்வே போலவே, கிரீன்ஃபீல்ட் திட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எட்டு வழி சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ்வே திட்டம், தற்போது பல்வேறு வழக்குகள் மற்றும் ஒப்புதல்கள் தொடர்பான பிரச்சனைகளால் தடைப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களின் வழியாகச் செல்லும் 277.3 கி.மீ நீளமுள்ள இந்த 8 வழி சாலை திட்டம், சென்னைக்கும் சேலத்திற்கும் இடையேயான பயண நேரத்தை தற்போதைய 5 முதல் 6 மணி நேரத்திலிருந்து வெறும் 2.5 மணி நேரமாக குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ்வே திட்டம் குறித்து அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் திட்டத்தின் நிலை குறித்து கேட்டதற்கு மத்திய தொழிற்சாலை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி சில வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) அமைச்சகம் தயாரித்த போதிலும், வழக்குகள் மற்றும் பல்வேறு ஒப்புதல்களுக்குத் தேவையான தாமதங்களால் இத்திட்டம் முன்னேற முடியாமல் உள்ளது என்று கட்கரி விளக்கினார். இதுதான் தமிழ்நாட்டின் முதல் எக்ஸ்பிரஸ்வே திட்டம், தற்போது 2வது திட்டத்திற்கான DPR அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications