இந்தியா முழுவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் முக்கியக் குறிக்கோள் ஆக இருக்கும் வேளையில், முதல் கட்டமாக நாட்டின் முக்கியமான வர்த்தகப் பகுதிகள் அனைத்திலும் உற்பத்தி, போக்குவரத்து, ஏற்றுமதிக்கு ஏதுவாகக் கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகச் சென்னையில் இருந்து திருச்சி வழியாகத் தூத்துக்குடி வரையிலான எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்குப் பிஎம் கதி சக்தி கீழ் சுமார் 30,502 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னை - திருச்சி - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் துவங்க உள்ளது.
மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்ட 4.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 63 இன்பரா திட்டங்களில் 3வது அதிக மதிப்புடைய திட்டம் சென்னை - திருச்சி - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் தான். அப்போ முதல் இரண்டு இடத்தில் இருக்கும் திட்டம்..?
பிஎம் கதி சக்தி
பிஎம் கதி சக்தி நேஷ்னல் மாஸ்டர் பிளான் கீழ் Network Planning Group (NPG) சுமார் 63 இன்பரா திட்டங்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் இணைப்பு, உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ் ஆகியவை பெரிய அளவில் மேம்படும். இந்த 63 திட்டங்களுக்குச் சுமார் 4.53 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி உட்செலுத்துதல் தேவைப்படுகிறது.
Network Planning Group பரிந்துரை
மத்திய அரசு 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மூலதன திட்டத்தை அறிவித்த நிலையில் Network Planning Group (NPG) இந்த 4.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது.
63 திட்டங்கள்
NPG பட்டியலிட்டு உள்ள இந்த 63 திட்டத்தில் எக்ஸ்பிரஸ்வே, சாலை நெட்வொர்க், ரேபிட் ரெயில், மெட்ரோ ரயில், ரயில்வே திட்டம், பெட்ரோலியம் பைப்லைன் எனப் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளது. மேலும் 6 மத்திய அமைச்சகத்தைச் சார்ந்து திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை
இந்த 63 திட்டத்தில் சுமார் 23 திட்டங்கள் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சார்ந்து உள்ளது, இத்துறை திட்டங்களின் மொத்த மதிப்பீடு 2,99,476 கோடி ரூபாய். இதில் அதிக மதிப்புடைய திட்டங்களில் டாப் 3 இடத்தைப் பிடிப்பது புனே - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே 49,241 கோடி ரூபாய், டெல்லி - குருகிராம் RRTS 37,987 கோடி ரூபாய், சென்னை - திருச்சி - தூத்துக்குடி 30,502 கோடி ரூபாய்.
8 அமைச்சகம்
இதைத் தொடர்ந்து ஹவுசிங் மற்றும் நகர விவகார அமைச்சகத்தைச் சார்ந்த 8 திட்டங்களின் மதிப்பு 79,015.7 கோடி ரூபாய், ரயில்வே அமைச்சகத்தைச் சார்ந்த 21 திட்டங்களின் மதிப்பு 47,041.2 கோடி ரூபாய், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தைச் சார்ந்த 5 திட்டங்களின் மதிப்பு 12,780.6 கோடி ரூபாய், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தைச் சார்ந்த 4 திட்டங்களின் மதிப்பு 9,056 கோடி ரூபாய், துறை அமைச்சகத்தைச் சாரந்த 2 திட்டங்களின் மதிப்பு 5,962.9 கோடி ரூபாய்.
ஒப்புதல்கள்
இந்த அனைத்து திட்டங்களையும் உரிய அமைச்சகத்தின் ஒப்புதல்கள் அடிப்படையில் அடுத்தகட்டத்திற்கு நகரும், மேலும் பிஎம் கதி சக்தி மூலம் உள்கட்டமைப்புத் திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டிய அனைத்து துறைகளையும் இணைத்து வேகமாகச் செயல்படுத்தக் கூடிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications