சென்னையை சுத்தி இத்தனை ஐடி பார்க் வருதா.. தலை சுத்துதுடா சாமி..!

இந்திய அலுவலக ரியல் எஸ்டேட் துறையில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறும் நகரமாக விளங்கும் சென்னையில், தினமும் பல நிறுவனங்கள் புதிய அலுவலகத்தைத் திறப்பதோ அல்லது விரிவாக்கம் செய்யும் பணியிலோ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதைத் தாண்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஐடி நிறுவனங்களும் தங்களுடைய கிளை நிறுவனத்தை எப்படியாவது சென்னையில் திறந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. அதிலும் குறிப்பாகப் பின்டெக் நிறுவனம் என்றால் வெளிநாட்டில் இருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னையில் தான் கால் வைக்கின்றனர்.

சென்னையை சுத்தி இத்தனை ஐடி பார்க் வருதா.. தலை சுத்துதுடா சாமி..!

இதனால் இந்தியாவின் டாப் 8 ஐடி நிறுவனங்களைத் தாண்டி சென்னையில் அலுவலகம் துவங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐடி சேவை மட்டும் அல்லாமல் பின்டெக், ஸ்டார்ட்அப், இன்ஜினியரிங் டெக்னாலஜி சர்வீசஸ் எனப் பல துறை சார்ந்த டெக் நிறுவனங்கள் வந்துகொண்டு இருக்கிறது.

அப்படி வரும் நிறுவனங்களுக்குப் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உடன் அலுவலக இடம் கட்டாயம் தேவை. இதேவேளையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் GCC துவங்கும் டிரெண்டில் இருக்கும் வேளையில் அலுவலக இடங்களுக்கான டிமாண்ட் அதிகமாகவே உள்ளது.

தற்போது சென்னை அலுவலக ரியல் எஸ்டேட் துறையில் சப்ளை - டிமாண்ட் அளவீடு மோசமான நிலைக்குச் செல்வதற்கு முன்பே நிலைமையைச் சீர் செய்ய வேண்டும் என முடிவு செய்த கட்டுமான நிறுவனங்கள் அடுத்தடுத்துச் சென்னையில் புசிய ஐடி பார்க்குகளைக் கட்ட துவங்கியுள்ளனர்.

அப்படி 2024-2029 ஆம் ஆண்டுக்குள் திறக்கப்பட உள்ள ஐடி பார்க்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் தலையே சுற்றுகிறது. இந்த லீஸ்ட்-ஐ நீங்களே பாருங்க. 2024-2029 வரை #சென்னையில் வரவிருக்கும் முக்கிய IT பார்க்குகளின் பட்டியல்.

  1. தமிழக அரசு உருவாக்கும் பின்டெக் சிட்டி முதல் கட்டம் - குறைந்தபட்சம் 10 மில்லியன் சதுர அடி
  2. DLF டவுன்டவுன் - 6.8 மில்லியன் சதுர அடி
  3. எல்&டி இன்னோவேஷன் கேம்பஸ் - 6.5 மில்லியன் சதுர அடி
  4. RMZ ஒரு விரிவாக்கம்- 5.1 மில்லியன் சதுர அடி
  5. சத்திய பெருங்குடி - கிட்டதட்ட 4 மில்லியன் சதுர அடி
  6. சர்வதேச தொழில்நுட்ப பூங்கா விரிவாக்கம் - 3.3 மில்லியன் சதுர அடி
  7. TCS சிறுசேரி Ph-2 - 3.2 மில்லியன் சதுர அடி
  8. தூதரகம் சிறப்பான விரிவாக்கம் - 3 மில்லியன் சதுர அடி
  9. ரஹேஜா பள்ளிக்கராணி - கிட்டதட்ட 2 மில்லியன் சதுர அடி
  10. லீ கிம் தஹ் சிறுசேரி - கிட்டதட்ட 2 மில்லியன் சதுர அடி
  11. பிரிகேட் ரேடியல் Rd - 1.5 மில்லியன் சதுர அடி
  12. ASV ஐகான் (நாவலூர்) - 1.2 மில்லியன் சதுர அடி
  13. பிரஸ்டீஜ்- WS - 1 மில்லியன் சதுர அடி
  14. பாஷ்யம் கிண்டி - கிட்டதட்ட 1 மில்லியன் சதுர அடி
  15. காசாகிராண்ட் (3 திட்டங்கள்) - கிட்டதட்ட 1.1 மில்லியன் சதுர அடி
  16. ASV ஹுசைனி Ph-1 - 1 மில்லியன் சதுர அடி
  17. TNHB, பீட்டர்ஸ் சாலை - கிட்டதட்ட 1 மில்லியன் சதுர அடி
  18. கேப்ஜெமினி விரிவாக்கம் - கிட்டதட்ட 80 லட்சம் சதுர அடி
  19. பிரிகேட் அண்ணாசாலை - கிட்டதட்ட 60 லட்சம் சதுர அடி
  20. டைடல் பார்க் ஆவடி - 55 லட்சம் சதுர அடி
  21. பீனிக்ஸ் மால் ஐடி டவர் - 4 லட்சம் சதுர அடி

இது தவிர 250,000 - 400,000 சதுர அடி வரம்பில் பல சிறிய IT பூங்காக்கள் சென்னை முழுவதும் கட்டப்பட்டு வருகிறது. அவுட்டர் ரிங் ரோட்டில் 3 ஐடி பூங்காக்களுக்கு கிட்டத்தட்ட 12 ஏக்கர் ஒதுக்கியதாக அரசு சமீபத்தில் கூறியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+