சென்னை மழை வெள்ளம் பாதிப்புகள் பெரும்பாலான பகுதிகளில் குறைந்துவிட்டாலும், முழுமையாகத் தீரவில்லை, பல பகுதிகளில் இன்னும் மழை நீர் தேங்கி கிடக்கிறது. ஒவ்வொரு முறையும் சென்னையில் பெரும் மழை பெய்யும் போது பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுவதாக மக்களும், தொழில்துறையினரும் புலம்பி வருகின்றனர்.
இந்த மழை வெள்ளத்திற்கு மத்தியில் சென்னையில் 3 புதிய நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகத்தைத் திறப்பதாகவும், விரிவாக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளது தொழிற்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரமாகச் சென்னையில் ஏற்பட்டு உள்ள இந்த மழை பிரச்சனை காரணமாக நிறுவனங்கள் வெளியேற வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டு வந்த வேளையில் தற்போது 3 நிறுவனங்களின் புதிய அலுவலகம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
பிரிட்டன் நாட்டின் நிதியியல் சேவை நிறுவனமான Equniti சென்னையில் மிகவும் பிரபலமான TRIL இன்போ பார்க்-ல் சுமார் 300 பேர் பணியாற்றும் அளவிலான டிசைன் மற்றும் டெவலப்மென்ட் சென்டரை துவங்கியுள்ளது.
இதேபோல் அமெரிக்காவின் பிரபலமான ஐடி சேவை நிறுவனமான Fiserv சென்னையில் எம்பசி டெக் பார்க்-ல் சுமார் 500 பேர் அமரும் வகையில் அலுவலகத்தை அமைக்க 50000 சதுரடி கொண்ட் ஆபீஸ் ஸ்பேஸ்-ஐ குத்தகைக்கு எடுத்துள்ளது.
இதோடு அமெரிக்காவின் மிகப்பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான FedEX சென்னையில் ஸ்மார்ட் மற்றும் நிலையான சப்ளை செயின் சேவைக்கான சென்டர் ஆப் எக்ஸ்சலென்ஸ் மையத்தைச் சென்னை ஐஐடி வளாகத்திற்குள் அமைத்துள்ளது.
கடந்த வாரம் சரக்கு போக்குவரத்து சேவை நிறுவனமான FedEx தனது எக்ஸ்பிரஸ் சேவை பிரிவின் முதல் Advanced Capability Community (ACC) சென்டரை முதல் முறையாக ஹைதராபாத்-ல் துவங்கியது. சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீடு செய்து ACC எனப்படும் டெக் மற்றும் டிஜிட்டல் இன்னோவேஷன் மையத்தைத் திறந்துள்ளது.


Click it and Unblock the Notifications