சென்னை அமெரிக்க தூதரகம்.. விசா காத்திருப்பு காலம் 680 நாள்..!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அமெரிக்க தூதரகங்களில் விசாவுக்கான நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. இந்த பிரச்சனையை விரைவாக தீர்க்கும் பணிகளை அமெரிக்க அரசு பல வகையில் செய்து வந்தாலும் நாட்டின் பல முக்கியமான இடத்தில் இன்னும் காத்திருப்பு காலம் பலரையும் வியக்க வைக்கிறது.

ஆனால் சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் அதிகப்படியான காத்திருப்பு காலம் இருக்கும் காரணத்தால் தமிழ்நாட்டு மக்கள் சோகத்தில் உள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பின்பு இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசா பெற்ற விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள வேளையில் காத்திருப்பு காலம் நீண்டுக்கொண்ட இருப்பது மூலம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு உள்ளோர் சோகத்தில் உள்ளனர்.

 அமெரிக்க தூதரகம்

அமெரிக்க தூதரகம்

இந்தியா முழுவதும் இருக்கும் அமெரிக்க தூதரகங்களில் விசாவுக்கான காத்திருப்பு காலம் மும்பையில் 332 நாட்கள், கொல்கத்தாவில் 357 நாட்கள், இவ்விரு நகரங்களிலும் காத்திருப்பு காலம் ஒரு வருடத்திற்கும் குறைவாக தான் உள்ளது.

சென்னை

சென்னை

ஆனால் சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை விசாவுக்காக தேர்வு செய்து விண்ணப்பத்தோர் இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சென்னை அமெரிக்க தூதரகத்தில் B1/B2 விசா பெற 680 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

டெல்லி

டெல்லி

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் சுற்றுலா மற்றும் வணிக விசா நியமனங்களுக்காக மிகக் குறைந்த காத்திருப்பு காலம் கொண்டு உள்ளது. டெல்லி அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்தோர் 247 நாட்களில் விசா பெற முடியும்.

F-1 மாணவர் விசாக்களுக்கு

F-1 மாணவர் விசாக்களுக்கு

கொல்கத்தா: 78 நாட்கள்
மும்பை: 73 நாட்கள்
டெல்லி: 74 நாட்கள்
சென்னை: 58 நாட்கள்

ஹெச்1பி மற்றும் எல்1 விசா

ஹெச்1பி மற்றும் எல்1 விசா

சமீபத்தில் அமெரிக்க அரசு பல ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் சில ஹெச்1பி மற்றும் எல்1 விசா பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் "domestic visa revalidation" திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து ஒப்புதல் வழங்கத் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்க அரசு "domestic visa revalidation" திட்டத்தின் சோதனை ஓட்டத்தை 2023 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் செய்ய உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+