ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் 2025ஆம் ஆண்டின் வாடிக்கையாளரின் ஷாப்பிங் போக்கு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஆண்டு முழுவதும் காண்டம் மட்டும் ரூ.1.06 லட்சத்துக்கு வாங்கியுள்ளார்.
ஸ்லிக்கி உணவு டெலிவரி சேவையின் முன்னோடியாக இருந்தாலும், தற்போது குவிக் காமர்ஸ் தளத்தில் மக்கள் அதிகம் ஷாப்பிங் செய்ய துவங்கியுள்ளனர். முதலில் அவசர தேவைக்கான பொருட்களை இத்தகைய குவிக் காமர்ஸ் தளத்தில் வாங்கப்பட்ட நிலையில் தற்போது முழு நேர ஷாப்பிங் தளமாக மாறியுள்ளது. இதன் அடிப்படையில் தான் இன்ஸ்டாமார்ட் நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் அதிகம் வாங்கிய வாடிக்கையாளர், அவர் வாங்கிய பொருட்கள், அதிகமாக வாங்கப்பட்ட பொருட்கள், பண்டிகை கால ஷாப்பிங் பொருட்கள் என பலவும் வாங்கப்பட்டு வரும் வேளையில் சென்னையை சேர்ந்த ஒருவரின் ஷாப்பிங் பழக்கம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த சென்னை வாடிக்கையாளர் சுமார் ரூ.1.06 லட்சத்துக்கு 228 ஆர்டர்களில் காண்டம் ஆர்டர் செய்துள்ளார். இது அறிக்கையில் விசித்திரமான செலவு போக்காக இவரின் ஆர்டர் பட்டியலிடப்பட்டு உள்ளது. இது குவிக் காமர்ஸ் சேவையை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை காட்டுகிறது.
இன்ஸ்டாமார்ட்டில் ஒவ்வொரு 127 ஆர்டர்களில் ஒன்று காண்டம் ஆர்டராக உள்ளது என தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் காண்டம் ஷாப்பிங் அளவு சுமார் 24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது ஆண்டின் "குறும்பு" மாதமாக அறிக்கை குறிப்பிடுகிறது.
குவிக் காமர்ஸ் தளத்தின் மூலம் மக்கள் அதிகளவில் பர்சனல் கேர் பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது என சமீபத்தில் சில ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளது. குவிக் காமர்ஸ் தளங்கள் இத்தகைய பொருட்களின் பேகேஜ்-ஐ மிகவும் ரகசியமாகவும், யாருக்கும் தெரியாத வகையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தயக்கமின்றி வாங்குவது அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications