சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் அன்றாடம் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கும், வேலைக்கு செல்வதற்கும் MRTS எனப்படும் ரயில் சேவைகளை தான் பயன்படுத்துகின்றனர். சென்னை வேளச்சேரியில் இருந்து பீச் ஸ்டேஷன் வரை செல்லும் இந்த ரயிலில் சென்னையின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எந்த ஒரு போக்குவரத்து இடையூறும் இல்லாமல் குறுகிய காலத்தில் குறைந்த கட்டணத்தில் எளிமையாக சென்று வரலாம்.
மெரீனா கடற்கரை செல்பவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு எல்லாம் MRTS ரயில் சேவைகள் பெருமளவில் பயன் தருகின்றன. கூடிய விரைவில் இந்த ரயில் சேவை சென்னை மெட்ரோ ரயில் கழகத்தின் வசம் செல்ல இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் கழகம் MRTS ரயில் சேவையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல்வேறு நவீன மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்திருக்கிறது.

தற்போது MRTS ரயில் சேவைகளில் பீக் அவர் எனப்படும் காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவு மக்கள் கூட்டம் காணப்படுவதால். பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த சூழலில் MRTS ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் கழகம் முடிவு செய்து இருக்கிறது.
ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு ரயிலை இயக்குவது என சென்னை மெட்ரோ ரயில் கழகம் முடிவு செய்து இருக்கிறதாம். பொதுமக்கள் காத்திருப்பு நேரத்தை குறைக்க வேண்டும், சிறந்த சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்து நிமிட இடைவெளிகளில் MRTS ரயில்களை இயக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.
தற்போது சென்னை MRTS ரயில் சேவை தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது . இது விரைவில் சென்னை மெட்ரோ ரயில் கழகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கழகம் MRTS ரயிலை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு இந்த போக்குவரத்து முறையிலேயே பெரிய மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் சேவைகளுக்கு நிகரான தரத்தில் எம்ஆர்டிஎஸ் சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சிறந்த பாதுகாப்பான ரயில் நிலையங்கள் , நவீன டிக்கெட் வழங்கும் வசதிகள், தூய்மையான மற்றும் ஏசி ரயில்களை கொண்டுவர முடிவு செய்திருக்கின்றனர் . ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்குவது என திட்டமிட்டு இருக்கின்றனர். இவ்வாறு இயக்கப்படும் ரயில்களில் 3 பெட்டிகள் ஏசி பெட்டிகளாக இருக்குமாம். இதற்கு ஏற்ப கூடுதலாக ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்ய உள்ளனர். வேளச்சேரி - பீச் ஸ்டேஷன் வரையிலான பயணம் இனி எளிதாகவும் மேலும் சௌகரியமானதாகவும் மாற உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications