சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே இல்லளூரில், இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான பொழுதுபோக்குப் பூங்கா பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது. சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த 'சென்னை வொண்டர்லா' பூங்காவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 1-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். டிசம்பர் 2-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த மெகா பூங்கா திறக்கப்பட உள்ளது. இது சென்னை மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய 'ரோலர் கோஸ்டர்' : இந்த வொண்டர்லா பொழுதுபோக்குப் பூங்காவின் மிக முக்கியமான ஈர்ப்பு, உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் சவாரிதான். லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற பெருநகரங்களில் மட்டுமே காணப்பட்ட இந்த அதிநவீன சவாரி, இப்போது சென்னையிலும் அமையப்பெற்றுள்ளது.

இந்த ரோலர் கோஸ்டருக்கு, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் பெருமையையும் குறிக்கும் வகையில், தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சவாரி, சாகச விரும்பிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதுடன், ஆசியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்களில் ஒன்றாகவும் இது உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் சவாரிகள் உட்பட 37 அம்சங்கள் : சென்னையில் அமையவிருக்கும் இந்தப் பிரம்மாண்டப் பொழுதுபோக்குப் பூங்காவில், மொத்தம் 37 வகையான சவாரிகள் இடம்பெற உள்ளன. இதில், 16 சவாரிகள் நீர் சவாரிகளாகவும், மேலும் தனியாக குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக 6 சவாரிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஃப்ரீ ஸ்டைல், ஸ்பின், ஸ்கை ரயில், ரெயின்போ லூப், ட்ராப் லுப், ட்ராப் ஜோன், ஸ்கை வீல், வேவ் ஃபுல், ஜீ-பால், வொண்டர்லா பம்ப் போன்ற பல வகையான சாகசச் சவாரிகள் இங்கு இடம்பெறுகின்றன. இது அனைத்து வயதினரையும் கவரும் வகையில் பல்வேறு அதிவேக மற்றும் நிதானமான சாகசங்களை இணைத்துள்ளது. பாதுகாப்பான மற்றும் உலகத் தரத்திலான உபகரணங்களுடன் இந்தப் பூங்கா செயல்பட தயாராகி வருகிறது.
டிக்கெட் விலை மற்றும் சலுகைகள் : சென்னை வொண்டர்லா பொழுதுபோக்குப் பூங்காவிற்கான டிக்கெட் கட்டணங்கள், வார நாட்களிலும் (திங்கள் முதல் வெள்ளி வரை) மற்றும் வார இறுதி நாட்கள்/விடுமுறை நாட்களிலும் மாறுபடுகின்றன. சாதாரண வார நாட்களில், பெரியவர்களுக்கு ஒரு நாள் டிக்கெட் விலை ரூ.1,489 என்றும், சிறுவர்களுக்கு ரூ.1,191 என்றும், மூத்த குடிமக்களுக்கு ரூ.1,117 என்றும் வசூலிக்கப்படுகிறது.
அதேசமயம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கட்டணம் சற்று உயர்கிறது. இந்த நாட்களில், பெரியவர்களுக்கு ரூ.1,779 ஆகவும், சிறுவர்களுக்கு ரூ.1,423 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.1,334 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்கா காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். இதற்கான டிக்கெட்டுகளை wonderla.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாக பூங்கா கவுண்டர்கள் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், முதல் நாள் திறப்பு சலுகையாக, டிசம்பர் 2-ஆம் தேதி முதல் சவாரி செய்பவர்களுக்கு சலுகை விலையாக ரூ.1,016-க்கு டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இது தவிர, பள்ளி மாணவர்களுக்கு தனிச் சலுகைகள் உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பிறந்தநாள் அன்று வரும் நபர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. (ஆனால், குறைந்தபட்சம் இருவர் வர வேண்டும், பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு மட்டும் இலவசம்).
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications