சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இளம் தொழில்முனைவோர், ஐடி ஊழியர்கள், கார்ப்ரேட் ஊழியர்கள் என வேலைக்கு செல்லும் பெரும்பாலான இளம் தலைமுறையினர் தற்போது ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான விலையில் விற்கப்படும் 2.5 படுக்கையறைகளைக் கொண்ட அப்பார்ட்மென்ட் வீடுகளை அதிகளவில் வாங்கி வருகின்றனர்.
இந்த 2.5BHK வீடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட 1,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்டதாக உள்ளது. ரியல் எஸ்டேட் டிரெண்டை மாற்றியது இந்த 2.5 BHK அம்சம் தான், வீட்டிலிருந்து பணிபுரிவது அதிகரித்துள்ள வேளையில், இந்த நவீன 2.5 BHK வீடுகளை ஆஃபீஸ் ஸ்பேஸாக மாற்ற முடியும் என்பதால் மக்கள் இதை அதிகம் தேர்வு செய்கின்றனர்.

சென்னை ரியல் எஸ்டேட் சந்தை ஆய்வாளர்களின் தரவுகள் படி, சென்னையில் ஆண்டுக்கு 20,000 வீட்டு விற்பனைகளில் கிட்டத்தட்ட பாதி இந்த மிட்-பிரீமியம் பிரிவில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. சென்னையின் முக்கிய ஐடி பகுதியான OMR பகுதியில் மிட்-பிரீமியம் வீடு விற்பனையில் சுமார் 60% பங்கீட்டை கொண்டுள்ளது.
OMR பகுதியை தாண்டி சென்னையில் போரூர், குன்றத்தூர் மற்றும் தாம்பரம் போன்ற பிற பகுதிகளிலும் மிட்-பிரீமியம் பிரிவில் அதிகளவில் விற்பனை நடந்துள்ளது. இந்த இடங்களில் புதிதாக வீடு வாங்கும் மக்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் தொழில்முனைவோருக்கு இந்த 2.5 BHK வீடுகள் முக்கியமான விருப்பமாக மாறியுள்ளது.
சென்னை நகரத்தின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருவதாலும், அதிகமான மக்கள் வேலை வாய்ப்புகளுக்காக சென்னைக்கு குடிபெயர்வதால், தரமான வீடுகளுக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதேபோல் சென்னையில் தற்போது ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்டும் அதிகரித்துள்ளது.
சென்னை ரியல் எஸ்டேட் சந்தை கடந்த 5 வருடத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு வந்துள்ளது, உலகம் முழுவதிலும் இருந்து நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை அமைக்கும் காரணத்தால் அலுவலகத்திற்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பல ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள் ஹவுசிங் திட்டத்தை அலுவலக இடமாக மாற்றியுள்ளது.
இதேவேளையில் பட்ஜெட் வீடுகளின் எண்ணிக்கை சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் பெரிய அளவில் குறைந்துள்ளது, மறுமுனையில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால், சாமானிய மக்களின் பங்கீடு குறைந்துள்ளது. இதன் விளைவாக சென்னையில் வீட்டு வாடகை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications