இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் குறிப்பாக லாபத்தில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முன்னோடியாக இருக்கும் ZOHO, சென்னையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டு இன்று உலகளவில் வர்த்தகம் செய்கிறது.
1996 ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்ட ZOHO நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பது ராதா வேம்பு தான். இவர் ஸ்ரீதர் வேம்பு அவர்களுடைய சகோதரியும், இந்தியாவின் பணக்கார பெண்களில் முக்கியமானவரும் ஆவார்.

1996 முதல் 2009 வரையில் AdventNet என்று அழைக்கப்பட்ட ZOHO நிறுவனம் ஆரம்பத்தில் நெட்வொர்க் மேனேஜ்மென்ட் சாப்ட்வேர் நிறுவனத்தை தான் உருவாக்கியது. AdventNet நிறுவனம் 2001ல் ஜப்பான் நாட்டிற்கு அதன் ஆப்ரேஷன்ஸ்-ஐ விரிவாக்கம் செய்த பின்பு தான் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான எண்டர்பிரைசர்ஸ் சேவையை உருவாக்கியது.
2005ல் ZOHO CRM சேவை அறிமுகம் செய்த பின்பு இந்நிறுவனத்தின் பெயர் மட்டும் அல்லாமல் சேவை பிரிவே தலைகீழாக மாறி ராக்கெட் வேகத்தில் வளர துவங்கியது. இன்று 9 நாடுகளில் 12 அலுவலகங்கள் இயங்கினாலும், சென்னை அலுவலகம் தான் தலைமை அலுவலகம்.
சென்னை ZOHO அலுவலகம் வித்தியாசமான வடிவத்தில் இருக்கும் காரணத்தாலும், இந்நிறுவனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியாலும் இந்த அலுவலகம் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவே மாறியுள்ளது.
சென்னை ZOHO தலைமை அலுவலகத்தின் கலக்கலான வீடியோ வெளியாகி பல ஆயிரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications