சென்னை: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகமான சிப்காட் கும்மிடிப்பூண்டி அருகே 531 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பூங்காவை அமைக்க தேவையான சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது. இப்பகுதி துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால், தமிழ்நாடு அரசு இன்னும் அதிக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
கும்மிடிப்பூண்டியில் அமைக்கப்படும் புதிய 531 ஏக்கர் தொழிற்பூங்கா ஏற்றுமதி வர்த்தகத்தைச் சேர்த்த நிறுவனங்களை ஈர்க்க ஏதுவான தளமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதேபோல் சென்னையைச் சுற்றி தொழிற்சாலை அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

இது சென்னையின் 12-வது சிப்காட் தொழிற்பூங்காவாகும். கும்மிடிப்பூண்டியில் தாலுகாவில் உள்ள சூரப்பூண்டி-யில் தான் இந்த 534 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பூங்கா மற்றும் குடியிருப்பு வளாகத்தையும் சிப்காட் அமைக்க உள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே வோல்டாஸ் நிறுவனம் ரூ. 1000 கோடி முதலீட்டில் ஏர் கண்டிஷனர் உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது.
இந்த புதிய தொழிற்பூங்கா மூலம் இப்பகுதியில் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிப்காட் திட்டங்கள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இப்பகுதியின் வளர்ச்சிப் பாதையை வேகப்படுத்த உள்ளது.
சமீபத்தில் SIPCOT மாநிலம் முழுவதும் 8 இடங்களில் 4,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்களை அமைக்க உள்ளதாகவும், இதற்காக சுமார் 11000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய 8 சிப்காட் மூலம் குறைந்தது 1,07,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் திருவள்ளூர், தூத்துக்குடி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்த 8 சிப்காட் தொழிற்பூங்காவில் கும்மிடிப்பூண்டி மற்றும் ஓட்டப்பிடாரம் சிப்காட் தான் மிகப்பெரியது.
கும்மிடிப்பூண்டி, சென்னை - 1,500 ஏக்கர்
ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி - 1,000 ஏக்கர்
ஸ்ரீபெரும்புதூர் - 750 ஏக்கர்
சென்னை ORR - 200 ஏக்கர்
திருவெறும்பூர், திருச்சி - 150 ஏக்கர்
அரியலூர் - 150 ஏக்கர்
மன்னார்குடி - 150 ஏக்கர்
பெரம்பலூர் - 100 ஏக்கர்


Click it and Unblock the Notifications