இந்தியாவில் தற்போது பெரு நகரங்களில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் ,சுற்றுச்சூழல் பாதிப்பு உள்கட்டமைப்பு , மக்கள் தொகை பெருக்கம் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.
வேலை வாய்ப்பு , கல்விக்காக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு படை எடுக்கிறார்கள். ஆனால் இந்த மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அங்கே வசதிகள் இருப்பது கிடையாது. இந்த நிலையில் தான் இது போன்ற பெரு நகரங்களுக்கு அருகிலேயே துணை நகரங்களை உருவாக்கும் பணிகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் சென்னைக்கு அருகிலேயே சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குளோபல் சிட்டி அதாவது சர்வதேச நகரம் ஒன்று உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பை எடுத்து சென்னைக்கு அருகே எந்த பகுதியில் இந்த குளோபல் சிட்டி அமையும் என அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
சென்னையில் இந்த குளோபல் சிட்டி என்பது சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும் இதற்காக சென்னைக்கு அருகே நான்கு இடங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ அடையாளம் கண்டு அந்த பட்டியலை தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தது. நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ,தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், உயர்தர கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு நகரமாக இது உருவாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது .

இதற்காக 2000 ஏக்கர் பரப்பளவிலான இடம் தமிழ்நாடு அரசுக்கு தேவைப்படுகிறது .எந்த பகுதியில் அமையும் இந்த குளோபல் சிட்டி அமையும் என்று எதிர்பார்ப்பு நீடித்திருந்த நிலையில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய சர்வதேச நகரத்தை அமைக்க மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக டெண்டர் கோரி இருக்கிறது.
ஐடி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் ,வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ,வர்த்தக மையங்கள், கல்வி நிறுவனங்கள் என உலகத்தரம் வாய்ந்த ஒரு நகரமாக இந்த நகரம் உருவாக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கு ஏற்ப சாத்தியங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் மாஸ்டர் பிளான் தயாரிக்கவும் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம் டெண்டர் கோரி இருக்கிறது .
இந்த டெண்டர் அறிவிப்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த மக்களுக்கு பெரிய அளவிலான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது. இந்த திட்டம் மூலம் மதுராந்தகம் பகுதி பெரிய அளவிலான வளர்ச்சி பெறும் என்பதை மறுப்பதற்கு இல்லை. குறிப்பாக நிலங்களின் மதிப்புகள் பல மடங்கு உயர போகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications