சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு மோட்டார் கார் தொழிற்சாலை மீண்டும் முழுவீச்சில் இயங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட வருடக்கணக்கில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வறண்ட பூமியாக காட்சி அளிக்கும் ஃபோர்டு தொழிற்சாலை விரைவில் பரபரப்பான பகுதியாக மாற உள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உற்பத்தியை நிறுத்திய இந்த தொழிற்சாலை-யின் எதிர்கால பயன்பாடு குறித்து ஆராய ஃபோர்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சமீபத்தில், தமிழ்நாடு அரசின் தொழில் துறை அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு பல முக்கிய திட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது தற்போது கிடைத்துள்ள அப்டேட் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் 2 -3 புதிய கார்களை அறிமுகம் செய்ய ஃபோர்டு திட்டமிட்டு வருவதால் சென்னை தொழிற்சாலையை வின்பாஸ்ட், JSW குரூப் கேட்டபோது விற்க மறுப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அதிகாரிகளைச் சந்தித்த பின்பு ஃபோர்டு இந்தியா நிர்வாகம் சுமார் 3000 ஊழியர்களை ஐடி பிரிவிலும், தொழிற்சாலைக்குத் தேவையான புதிய ஊழியர்களை பணியில் சேர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஃபோர்டு மோட்டார் கம்பெனி, சர்வதேச சந்தை பிரிவு தலைவர் கே ஹார்ட், தமிழ்நாடு அரசு தொழில்துறை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பு 3000 ஊழியர்களை பணியில் சேர்ப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு இந்தியாவில் எவரெஸ்ட், மாக் ஈ எலர்ட்ரிக் கார் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக ஒரு எஸ்யூவி கார் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து ஃபோர்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஃபோர்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகளை சந்தித்து, மாநில அரசின் அளப்பரிய ஆதரவுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தோம்" என்றார்.
"மேலும், சென்னையில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் எங்களது உலகத் தரம் வாய்ந்த பிஸ்னஸ் சொல்யூஷன் குழுவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அரசுக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டோம். அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தக் குழுவில் 2,500 முதல் 3,000 வரையிலான கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றும் அவர் கூறினார். FORD Business Solutions என்பது டெக் பிரிவாகும்.
இதற்கிடையில் ஃபோர்டு நிறுவனம், சென்னை தொழிற்சாலைக்கு தேவையான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை லிங்க்டுஇன் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் மீண்டும் களமிறங்க உள்ளதாகக் கிடைத்து வரும் தகவல்கள் உண்மையாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications