காணும் பொங்கல் என்றாலே சென்னை வாசிகளுக்கு கடற்கரை , கிண்டி சிறுவர் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்கள்தான் நினைவிற்கு வரும். காணும் பொங்கல் இந்த ஆண்டு சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் வந்திருப்பதால் வழக்கத்தை விட இன்றும் நாளையும் இந்த பகுதிகளில் எல்லாம் கூட்டம் அலைமோதும்.
சென்னை மாநகர காவல் துறை மக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் எல்லாம் கூடுதலாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை ஏற்படுத்தியிருக்கிறது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சென்னை பொறுத்தவரை காணும் பொங்கல் என்றாலே கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள். எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கும் வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பல இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. காணும் பொங்கல் நாளில் பொதுமக்கள் வழக்கம் போல மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கூட்டத்தில் சிக்கி தவிப்பதை தவிர்த்து, காணும் பொங்கலை இன்னும் உற்சாகமாகவும் நம்முடைய பாரம்பரியத்தோடவும் கொண்டாடி மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பினை தமிழ்நாடு அரசே ஏற்படுத்தி தந்திருக்கிறது. அது என்ன என்பதை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு சார்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை எடுத்துரைக்கும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 14ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். பறை இசைத்து விழாவை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னையில் மொத்தம் 20 இடங்களில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படுகிறது. இன்றும் நாளையும் பொதுமக்கள் காணும் பொங்கலையொட்டி சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவுக்கு சென்று நம்முடைய பாரம்பரிய கலைகளை கண்டு ரசித்து பொழுதை போக்கலாம்.

சென்னையில் கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 20 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். சென்னை சங்கமம் நிகழ்ச்சி தினம் தோறும் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக பிரத்யேக இணையதளமே (https://www.chennaisangamam.in) தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த இணையதளத்தில் இன்றைய தேதியில் உங்க ஏரியாவில் எந்த பகுதியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது எந்தெந்த குழுவினர் என்ன மாதிரியான கலைகளையும் திறமைகளையும் வெளிப்படுத்த இருக்கின்றனர் என்ற விரிவான தகவல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இன்றைய நாளை பொறுத்தவரை வட சென்னை பகுதியில் மெரினா கடற்கரை தவிர்த்து ராயபுரம் மற்றும் கொளத்தூர் ஆகிய இரண்டு இடங்களிலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கொளத்தூர் அரசு விளையாட்டு மைதானத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ராயபுரத்தில் விளையாட்டு மைதானத்தில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களும் சென்னை சங்கமம் விழா களைகட்ட இருக்கிறது. இதில் கைச்சிலம்பு, பம்பை, பெரிய மேளம், களியாட்டம் ,தமிழிசை, மல்லர் கம்பம் உள்ளிட்ட வித்தியாசமான நிகழ்ச்சிகளை எல்லாம் நாம் கண்டு ரசிக்க முடியும்.
தென் சென்னையில் பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளை தவிர்த்து பார்த்தால் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி பூங்கா , மற்றும் தி.நகர் நடேசன் பூங்கா ஆகிய மூன்று இடங்களிலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் புரவியாட்டம், களரி, பல்சுவை கிராம நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
மத்திய சென்னை பகுதியை பொருத்தவரை வள்ளுவர் கோட்டம், செம்மொழிப் பூங்கா, எழும்பூர் அருங்காட்சியக வளாகம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அடுத்ததாக தாம்பரத்தில் வள்ளுவர் குருகுலம் பள்ளி மற்றும் பல்லாவரம் கண்டோன்மென்ட் பூங்கா ஆகிய இடங்களிலும், ஆவடி நகராட்சியில் படைத்துறை உடை தொழிற்சாலை வளாகத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மேற்கு சென்னையில் கோயம்பேடு, வளசரவாக்கம், அசோக் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கரகம், நையாண்டி மேளம், கிராமிய பாட்டு, பறையாட்டம், தேவராட்டம், உடுக்கை பாட்டு என உங்களுடைய குழந்தைகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்வதற்கான மிகச் சிறந்த ஒரு நிகழ்ச்சிகளாக இவை இருக்கின்றன. எனவே மெரீனாவுக்கு சென்று கூட்டத்தில் சிக்கி கொள்வதை விட இந்த இடங்களுக்கு சென்று இந்த இரண்டு நாட்களும் பொழுதை போக்கலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications